தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. சமீப காலமாகவே இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், நயன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் O2. உயிர்கள் வாழ அடிப்படை தேவையான ஆக்சிஜனை குறிக்கும் வார்த்தை தான் O2.

இதையும் பாருங்க : முடிஞ்ச அளவு Try பண்ணிட்டேன் Ak வெறியர்களே – போனி கபூரிடம் இருந்து Ak61 அப்டேட்டை வாங்கி கொடுத்த பார்வதி.

Advertisement

O2 படம் குறித்த தகவல்:

இந்த அறிவியல் பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி கே விக்னேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.

O2 படத்தின் டீசர் :

தமிழழகன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இப்படத்தில் நடிகை நயன்தாரா எட்டு வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்திருக்கிறார். டீசரில் பேருந்து மண்ணுக்குள் புதைந்து இருப்பது போல காட்டப்படுகிறது. ஒரு பைப் வழியாக உதவி செய்யுங்கள், யாராவது காப்பாற்றுங்கள் என்று குரல் மட்டும் கேட்கிறது.

Advertisement

O2 படம் குறித்து தயாரிப்பாளர் சொன்னது:

இப்படி பல திரில்லர் உடன் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டீசெர் வெளியானதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கமெண்ட் போட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நம்ம ஊரில் ஏன் வித்தியாசமாக யோசிக்கிறதுலன்னு ஆதங்கப்படறாங்கன்னு, நம்ம ஒரு கதையை தேடி எடுத்து வந்தால் பல பயலுவ இது எந்த கதையுடன் ரீமேக் என்று கேட்கிறார்கள். உங்க டிசைனே புதுசு புதுசா இருக்கே, ஏன்டா? இது ஒரிஜினல் என்று இயக்குனரே சொல்லி இருந்தார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement

இயக்குனர் விளக்கம் :

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் O2 படம் கொரியன் படத்தின் ரீமேக் என்று கூறி வருகிறர்கள். அதில் சிலர், Sinkhole – 2021ல் கொரியனில் வந்தது. ஒரு கட்டிடத்தின் 500 மீட்டர் அடியில் போகும் Sinkhole- 2013ல் அமெரிக்காவில் வந்த படம். படத்தில் ஸ்கூல் பஸ் உள்ள போகும். இந்த இரு படங்களின் ரீமேக் என்றும் ஆனால், O2 படம் ஒரிஜினல் அல்லது இன்ஸ்பிரஷன் கிரடிட் கொடுக்கலாம் தப்பு இல்ல என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு பதில் கொடுத்துள்ள O2 பட இயக்குனர் ‘தயவு செய்து ஒரு படத்திற்கும் ரீமேக்கிற்கும் குழம்பிகொள்ள வேண்டாம். சர்வைவர் திரில்லர் என்பது ஒரு கதைக்களம். அணைத்து சர்வைவல் திரைப்படத்திற்கும் அதற்கு ஏற்றார் போல கதையை உருவாக்க வேண்டும். அதற்கு பெயர் காபி இல்லை ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement