‘உனக்கு 32 எனக்கு 56’ – பிரபல பாலிவுட் நடிகருடன் Dating செய்தாரா பீஸ்ட் நாயகி ? புகைப்படத்தை கண்டு கேலி செய்யும் ரசிகர்கள்.

0
781
- Advertisement -

பூஜா ஹெக்டேவுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் டேட்டிங் செய்யும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

சல்மான்கானின் திரைப்பயணம்:

ஆனால், இடையில் மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

சல்மான் நடிக்கும் படம்:

அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது நடிகர் சல்மான் கான் நடிகை பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதுதான்.

-விளம்பரம்-

சல்மான் கான்- பூஜா ஹெக்டே டேட்டிங்:

சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து பர்ஹாத் சஞ்சி இயக்கி வரும் ‘கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு படங்களிலும் இவர்கள் இணைந்து நடிப்பதாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக டீவ்ட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், மெகா ஸ்டார் சல்மான் கான், பூஜா ஹிட்டே மீது காதல் வயப்பட்டு இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் பூஜாவை அடுத்த இரண்டு படங்களுக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் என்று நெருங்கிய வட்டாரகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விமர்சிக்கும் ரசிகர்கள்:

இந்த பதிவின் மூலம் 32 வயதான பூஜா ஹெக்டேவுடன் 56 வயதான சல்மான் கான் டேட்டிங் செய்வது சரியா? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதை பார்த்த பூஜாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் சல்மான்கான் ஏற்கனவே பலமுறை நடிகைகளுடன் டேட்டிங் செய்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஐஸ்வர்யாராய், கத்ரீனா கை போன்ற பலருடன் காதலித்தும் இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சல்மான் கான், பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செய்து வருவதை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement