பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் நேற்று காலமான சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நேற்று (செப்டம்பர் 25) பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

ஸ் பி பியின் மறைவிற்கு நாட்டின் பிரதமர் துவங்கி பாலிவுட், டோலிவுட் வரை இருக்கும் பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும், பல்வேறு தமிழ் நடிகர், நடிகைகளும் எஸ் பி பியின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

பாடகர் எஸ்.பி.பி யின் மறைவிற்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ‘பாலு சீக்கிரம் எழுந்துவா உன்னை பாக்க நா காத்திருகேன்னு சொன்னேன். கேட்கல நீ கேட்கல போய்ட்ட எங்க போன? கந்தர்வர்களுக்கு பாடுறதற்காக போய்விட்டாயா? இங்க உலகம் ஒரு சூனியாமா போச்சு உலகத்தில ஒன்னும் எனக்கு தெரில. பேசறதுக்கு பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தை இல்லை. என்ன சொல்றதுனே தெரியல. எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, இதுக்கு அளவு இல்லை.” என்று உருக்கமாக பேசி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் எஸ் பி பியின் அடக்கம் செய்யப்பட்ட இன்றே இசையமைப்பாளர் இளையராஜா, திறைவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் உள்ள கோவிலுக்கு சென்று தனது நண்பர் எஸ் பி பியின் ஆத்மா சாந்தியடைய கையில் தீபம் ஏந்தி பிரார்த்தனை செய்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement