14 வருட திருமண வாழ்கை, மகள் இருக்கும் நிலையில் கணவரை பிரிந்த அயலான் பட நடிகை.

0
276
- Advertisement -

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து இருப்பவர் தான் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை’, அரவிந்த்சாமி உடன் நடித்த ‘என் கவிதை’, காற்றே’,கேப்டன் விஜய்காந்தின் ‘நரசிம்மா’, தளபதி விஜய்யின் ‘நெஞ்சினிலே’ உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். சில தமிழ் படங்களில் இஷா கோபிகர் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

-விளம்பரம்-

மேலும், இவர் அதிகமாக ஹிந்தியில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் அதிகமாக நடித்து உள்ளார். மேலும், இஷா கோபிகர் அவர்கள் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் நிறைய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார். சினிமா மட்டும் இல்லாமல் இவர் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

அயலான் படம்:

தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “அயலான் ”. இந்த படத்தில் நடிகை இஷா கோபிகர் நடித்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் இஷா கோபிகர். இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படம் ஆகும். இந்த படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

இஷா கோபிகர் திருமணம்:

இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர். இதனிடையே நடிகை இஷா கோபிகர் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஜிம் ஒன்றில் தான் சந்தித்தார்கள். அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

இஷா கோபிகர் குடும்பம்:

பின் இவர்களுடைய நட்பு காதலாக மாறியது. அதனை தொடர்ந்து தான் இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்தார். திருமணத்துக்கு பிறகும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 14 ஆண்டுகால வாழ்க்கையில் இருந்து இஷா கோபிகர் பிரிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்து செய்த இஷா கோபிகர்:

சமீப காலமாகவே இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும், குழந்தையை கருத்தில் கொண்டு இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முயற்சி செய்திருந்தார்கள். ஆனால், இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் முத்தியது. இதனால் இருவருமே விவாகரத்து செய்து விட்டார்கள். தற்போது இஷா கோபிகர் தன்னுடைய மகளுடன் தனியாக தான் வசித்து வருகிறார்.

Advertisement