எம்.எஸ்.பாஸ்கர் மகள் சொகுசு கார் வாங்கியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் எம்.எஸ். பாஸ்கரும் ஒருவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே நாகப்பட்டினத்தில் தான். இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார்.

அதற்கு பிறகு தான் எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் முதன் முதலாக திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார். சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருடைய சிறந்த காமெடி, நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இவர் தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
எம்.எஸ் பாஸ்கர் குறித்த தகவல்:
மேலும், இவர் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, கங்கா யமுனா சரஸ்வதி, செல்வி போன்ற தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போதும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம்கள் எமக்குத் தொழில் ரொமான்ஸ், சூது கவ்வும் 2.

எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்:
இதற்கிடையில் இவர் ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா அவர்கள் ’96’ படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவரது மகள் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக உள்ளார். பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார். ரகுல் ப்ரீத்தி சிங், ராஷ்மிகா போன்ற பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார்
தாத்தாவான எம்.எஸ். பாஸ்கர்:
இவர் 2021 ஆம் ஆண்டு, அகுல் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்திருக்கிறார்கள். பின், பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையாக வளைகாப்பை நடத்தி இருந்தார்கள். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவிற்கு கடந்த தீபாவளி அன்று அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இதை ஐஸ்வர்யா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
சொகுசு கார்:
இந்நிலையில், தனது வீட்டிற்கு மகாலட்சுமி, செல்வ லட்சுமி வந்த நேரம் சில மாதங்களிலேயே புதிதாக ஜாக்குவார் காரை அகுல் சுதாகர்- ஐஸ்வர்யா தம்பதி வாங்கியுள்ளனர். இதன் விலை 60 லட்சம் முதல் 80 லட்சம் இருக்கும். இப்போது புதிதாக கார் வாங்கினால் அதில் மகன், மகள் அல்லது மனைவியின் பாதங்களை காரில் பதிக்கும் ட்ரெண்டை பலரும் விரும்பி வருகின்றனர். அந்த வகையில் அந்த சொகுசு காரில் குழந்தையின் கால் பாதம் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். தற்போது புதிய சொகுசு கார் வாங்கியிருக்கும் எம்.எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்






