ப்பா, இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயின் தங்கையாக நடிச்ச நடிகையா இது. நிஜத்தில் வேற மாறி போங்க.

0
5801
malavika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மாளவிகா மேனன். இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தின் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் அருவா சண்ட என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நடிகை மாளவிகாவை கவர்ச்சி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் ஆதிராஜன் கூறினார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் மிக கவர்ச்சியான ஆடை அணிந்து தான் ஆட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு நடிகை மாளவிகா இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு எடுத்துச் சொன்னார்.

- Advertisement -

ஒரு வழியாக கடைசியில் வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்து நடிகை மாளவிகாவை பாடல் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டதது. மேலும், சமாதானம் அடைந்த மாளவிகா கொட்டும் அருவியில் நனைந்தபடி அந்த பாடலுக்கு ஆடிக்கொடுத்தார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்த அம்மணிக்கு தமிழில் பட வாய்புகள் குறைய தொடங்கியது. பிற மொழிகளிலும் அம்மணிக்கு இதே நிலைமை தான். இந்நிலையில் நடிகை மாளவிகா மேனன் வேட்டி கட்டிக்கொண்டு செம்ம குத்தாட்டம் ஆடிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் லாக்டவுன் காரணமான மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் நடிகை மாளவிகா மேனன் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் வேட்டி கட்டிக்கொண்டு மலையாள பாடல் ஒன்றுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு உள்ளார். தற்போது அந்த டிக்டாக் வீடியோவை நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கவர்ச்சி நோ சொன்ன மாளவிகா மேனனா இது? என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement