பிரபல நடிகர் வீட்டில் விடிய விடிய பார்ட்டி..! இரவு 2.45 மணிக்கு கார் விபத்தில் சிக்கிய நடிகை

0
1063
Jacquline

இந்தியில் “ரேஸ்”, “ஹவுஸ் புள்” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஜாகிலின் பெர்னாண்டஸ். இலங்கை மாடல் அழகியான இவர் 2006 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த மிஸ் அழகி போட்டியில் வெற்றிபெற்று அழகி பட்டதையும் தட்டியுள்ளார். இந்தியில் 2009 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான “அலாவுதீன் ” என்ற படத்தில் நடித்து பாலிவுட் சினிமா துறையில் அறிமுகமானர்.

jacqueline fernandez

பாலிவுட் துறையில் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், தற்போது சல்மான் கான் நடித்து வரும் “ரேஸ் 3” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு இந்த படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகி ஹிந்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.

சமீபத்தில் “ரேஸ் 3” படக்குழுவினருக்கு நடிகர் சல்மான் கான் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டியில் விடிய விடிய ஆட்டாம் போட்டு விட்டு ஜாகிலின் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பார்ட்டி முடிந்து இரவு 2 மணிக்கு தனது காரில் வீடு திரும்பியுள்ளார் ஜாகிலின், அப்போது கார் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு ஆட்டோ மீது மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக நடிகை ஜாகிலின் காரின் பின் இருக்கையில் அமர்த்திருந்ததால் காயம் ஏதுமின்றி தப்பியுள்ளார்.