ஜகமே தந்திரம் படத்தால் தனக்கும் தனுஷுக்கு ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து பேசியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த். தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக திகழ்ந்து வரும் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கர்ணன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தணுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன், தமிழில் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வாகிரகவானுடன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’, இந்தியில் ஒரு படம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து கடந்த ஆண்டு மே 1-ம் தேதியே ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது.

இதையும் பாருங்க : கொள்ளு தாத்தா, தாத்தா, மற்றும் தந்தை – 4 தலைமுறை குடும்பப் படத்தை வெளியிட்ட உதயநிதியின் மகன்.

Advertisement

பிப்ரவரி 12-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் என முதலில் முடிவெடுத்து தயாரிப்புத் தரப்பு தனுஷுக்கு தகவல் சொன்னது. ஆனால், இடையில் நேரடி ஓடிடி ரிலீஸுக்காக நெட்ஃபிளிக்ஸில் பேச்சுவார்த்தைகள் நடக்க அதிருப்பதியானார் நடிகர் தனுஷ். மேலும், `தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புகிறேன்” என நடிகர் தனுஷ் ட்வீட்போட இந்த படத்தில் திரையரங்கில் வெளியிட பல்வேறு முயற்சிகள் நடந்தது. இருப்பினும் இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தால் தனக்கும் தனுஷுக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளார். அதில், நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இந்த பட விவகாரத்தில் எங்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த படம் தியேட்டரில் ரிலீசானால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னது சரியான கருத்து தான். ஆனால், கமர்ஷியல் ரீதியாக கடந்த ஓராண்டாக, இத்தகைய பெரிய பட்ஜெட் படத்தை வைத்து கொண்டிருப்பது, எவ்வளவு வட்டி என்பது எனக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement