கொள்ளு தாத்தா, தாத்தா, மற்றும் தந்தை – 4 தலைமுறை குடும்பப் படத்தை வெளியிட்ட உதயநிதியின் மகன்.

0
29153
udhay
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

-விளம்பரம்-

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : எம்.ஜி.ஆராக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் கோபி – இத பாத்து எத்தன பேர் திட்டப் போறாங்களோ ?

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா வேறு யாரும் கிடையாது தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்து வந்தவர் தான் கிருத்திகா.கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில் இவருடைய மகன் இன்பநிதி தனது குடும்ப புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin and son Inbanidhi look like buddies in latest viral  photo - Tamil News - IndiaGlitz.com

நேற்று (ஜூன் 5) முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது நான்கு தலைமுறை படத்தைப் பகிர்ந்துக் கொண்டார் இன்பா. அதில் மறைந்த தலைவர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என நான்கு தலைமுறையினர் இடம் பெற்றிருந்தனர்.

-விளம்பரம்-
Advertisement