ஜகமே தந்திரம் பட நடிகையா இது – லேட்டஸ்ட் புகைப்படம். இந்த கிளாமர் லுக்க நீங்களே பாருங்க.

0
1917
jagam
- Advertisement -

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் என்ற பெயருடன் திகழ்ந்து வரும் தனுஷ்ஷின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தணுஷ், ஹாலிவுட்டில் கிரே மேன், தமிழில் கார்த்திக் நரேனுடன் ஒரு படம், செல்வாகிரகவானுடன் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′, இந்தியில் ஒரு படம் என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

-விளம்பரம்-
Gallery

2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த படத்தின் பணிகள் எப்போதோ நிறைவடைந்து கடந்த ஆண்டு மே 1-ம் தேதியே ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்ட இப்படம் கொரோனா லாக்டெளன் காரணமாக அப்படியே நிறுத்தப்பட்டது. தமிழில் பீட்சா ஜிகர்தண்டா, பேட்ட போன்ற வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.  தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

ஒரு கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார்.அதே போல இவர் தமிழில் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இது போக பிரம்மாண்ட செலவில் மணிரத்னத்தின் கணவுப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார்.அதே போல இவர் தமிழில் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இது போக பிரம்மாண்ட செலவில் மணிரத்னத்தின் கணவுப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம். ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Advertisement