ரக்கிட்ட ரக்கிட்ட பாடலில் ஒரே ஸ்டெப்பில் அனைவரையும் கவர்ந்த நடிகை – பிகினி உடையில் கொடுத்த போஸ்.

0
14113
sanjana
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 18 ஆம் தேதி Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார்.

-விளம்பரம்-

அவரை லண்டன் கேங்ஸ்டர் கும்பல், மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர்.பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். பின்னர் தனுஷ் என்ன ஆனார், புலம்பெயர் தொழிலார்களுக்கு என்ன ஆனது என்பது தான் கதை. இந்த படம் மிகவும் சுமாரான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த படத்தின் அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக ‘ரகிட்ட ரகிட்டா’ பாடல் மாபெரும் ஹிட் அடைந்தது. இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் தான் நடனனமைத்து இருந்தார்.இந்த பாடலில் தனுஷ் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணாக வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் இவரது நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தது.

இவர் வேறு யாரும் இல்லை நடிகை சஞ்சனா நடராஜன் தான். இவர் ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘நோட்டா’ படத்திலும், ரஜினியுடன் ‘2.0’ படத்திலும் , ரித்திகா சிங் மாதவன் நடித்த ‘இறுதி சுற்று’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார் சஞ்சனா. மேலும், இவர் மாடல் அழகியும் அவர். அதனால் இவர் பிகினி உடைகளில் கூட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement