தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெய். இவர் பாடகர் தேவாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற படத்தில் குணா கதாபாத்திரத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, வாமனன், கோவா, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதோடு நடிகர் ஜெய் அவர்கள் வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 28, சென்னை 28- 2, கோவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த மாநாடு படத்தில் ஜெய்யும் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே வெங்கட்பிரபு அவர்கள் ஒரு டீமுடன் தான் அதிகம் வேலை செய்வாராம். அதிலும் குறிப்பாக சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்களுக்கு கண்டிப்பாக தான் இயக்கும் படங்களில் ஒரு காட்சியிலாவது வாய்ப்புக் கொடுப்பார்.

Advertisement

சூப்பர் ஹிட் அடித்த மாநாடு :

அந்த வகையில் மாநாடு படத்தில் ஒரு காட்சியில் மஹத் நடித்திருப்பார். மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு தான் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபு காமாட்சி தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். யுவன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து இருக்கிறார்.

மாநாடு பட வாய்ப்பு :

ஒரு புத்தம் புதிய வித்தியாசமான கதைக்களத்தில் சிம்பு அசத்தி இருக்கிறார். எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படமாக்கியிருக்கிறார். படத்தில் அரசியல் மூலம் மத கலவரத்தை எந்த அளவிற்கு ஆழமாக பிரச்சனை செய்யலாம் என்பதையும், டைம் லூப் கான்செப்ட்டையும் அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் மாநாடு படத்தில் ஜெய் கேமியோ ரோலில் வருவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

Advertisement

புயலால் பறிபோன மாநாடு :

ஆனால், வரவில்லை. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெய் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பது, நானும் மாநாடு படத்தில் வருவேன் என்று ரொம்ப எதிர்பார்த்தேன். வெங்கட்பிரபு என்னை கூப்பிட்டார். பாண்டிச்சேரியில் சூட் நடக்கும்போது ஒரு நாள் என்னுடைய போர்ஷன் இருந்தது. சரியாக அன்னைக்குதான் புயல் வந்ததனால் எல்லோரும் சென்னை கிளம்பி வந்துவிட்டார்கள். அப்புறம் மீதி இருக்கிற போஷன் எல்லாம் இங்கேயே எடுத்து படத்தையும் முடித்து விட்டார்கள். என்னை மறந்து விட்டார்கள். பின் நான் நடுவில் எனக்கு சில காட்சிகள் இருக்கு என்று சொன்னீர்களே என்று வெங்கட் பிரபுவிடம் கேட்டேன்.

Advertisement

ரெடியாகி வரும் பார்ட்டி :

அவர் எதுவும் இல்லை. இதுவே சரியாக அமைந்து விட்டது என்று சொல்லிவிட்டார். மாநாடு செம தூள் ஆக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு. இதுதான் பக்கா வெங்கட்பிரபு படம். அடுத்து பார்ட்டி படம் ரெடியாக இருக்கு, இதில் சிவா, சத்யராஜ் சார் என்று எல்லோரும் கலக்கியிருக்கிறார்கள். எனக்கும் வித்தியாசமான கேரக்டர். அதன் ரிலீசுக்காக தான் வெயிட்டிங் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெய்யின் அடுத்த படங்கள் :

தற்போது ஜெய் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா, எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கத்தில் எண்ணித்துணிக, செந்தில்குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் காக்கி, வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக தான் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement