இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிவி பிரகாஷின் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

Advertisement

சென்னையில் பூர்வ குடிமக்களை சென்னைக்கு வெளியே அரசு குடியமர்த்துகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் குறித்தும் பேசும் படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. படத்தில் ஜிவி பிரகாஷ் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா விற்பனை செய்யும் இரு குழுக்களிடையே ஏற்படும் பிரச்சினையும் அந்த பிரச்சனையில் காவல்துறை, அரசியல் கட்சிகள் இணைந்து கலவரத்தை ஏற்படுத்துகிறது. கடைசியில் என்னாகும் என்பதைக் கொண்டு தான் கதை நகர்கிறது. மேலும், கஞ்சா விற்கும் தன் நண்பன் ராக்கி கொலை செய்யப்படுகிறார்.

இதையும் பாருங்க : பொது மேடையில் ஆணுடன் ஸ்பூன்லிங் கேம் விளையாடிய ஜூலி – என்ன இப்படி தொந்தியும் தொப்பையுமா மாறிட்டாரு.

அதன்மூலம் ஜிவி பிரகாஷ் உன்னுடைய வாழ்க்கை பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கடைசியில் ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்? தன் நண்பருக்காக பழி வாங்கினாரா? சேரி மக்களின் வாழ்க்கை மாறியதா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ஜீவி பிரகாஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக அபர்ணதி காவிரி நகர் பெண்ணாக தன்னுடைய கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் நண்பராக ராக்கி கதாபாத்திரத்தில் கலை நடித்திருக்கிறார்.

Advertisement

மேலும், படத்தில் வெளிவந்த காத்தோடு காத்தாதேன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் சில பாடல்கள் கதைக்கு தேவையா? என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. படத்தின் முதல் பாதி நன்றாக சென்றாலும் இரண்டாம் பாதி பார்ப்போரை சலிப்படைய செய்திருக்கிறது. படத்தில் அழுத்தமற்ற காட்சிகளை இயக்குனர் காட்டி இருப்பதால் படம் பார்ப்போருக்கு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மேலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வலிகளை இயக்குனர் அழகாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஆனால், அதே கதையை இன்னும் அழுத்தமாக கையாண்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் என்றாலே கஞ்சா போதை பொருள், திருட்டு தொழில் செய்பவர் என்று முத்திரை வைக்கும் நிலையில் அவற்றை மறுப்பதற்காக இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதம் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்லணும்.

அதோடு படத்தில் ஜிவி பிரகாஷ் திருடனாக நடித்திருந்தாலும் அதற்கான காரணமும் நியாயமும் சரியாக அமையவில்லை. அதே போல் சில கதாபாத்திரங்கள் எதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார்கள். மேலும், படத்தில் பல கருத்துக்கள் பேச வாய்ப்பு இருந்தும் இயக்குனர் அதை கோட்டை விட்டு விட்டார். கதையும், கதைக் களத்தையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக கொண்டு சென்றிருந்தால் ஜெயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும்.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களின் வலியை இயக்குனர் அழகாக செய்திருக்கிறார்.

மைனஸ்:

முதல் பாதி நன்றாக சென்ற அளவுக்கு இரண்டாம் பாதியில் சொல்லிக்கொள்ளும் அளவில் கதை அழுத்தம் இல்லை.

படம் சற்று போர் அடிக்கும் வகையில் தான் சென்று கொண்டிருக்கின்றது.

கதையில் அழுத்தமும் மாற்றங்களும் எதுவுமே இல்லாததால் படம் தோல்வி என்றே சொல்லலாம்.

பல வெற்றி படங்களை கொடுத்த ஜிவி பிரகாஷின் ஜெயில் படம் ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருக்கிறது. ஆனாலும், இத்தனை ஆண்டு காத்திருப்பை படம் பூர்த்தி செய்யவில்லை.

Advertisement