வசந்த பவனின் வாரிசு, அப்பல்லோ முன்னாள் மருத்துவர், 11 ஆண்டுக்கு முன்பே திருமணம் – ஜெயிலர் ரஜினி மகனின் அறிந்திராத பக்கம்.

0
3322
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக வசந்த் ரவி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன் முதலாக தரமணி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை எடுத்து இவர் ராக்கி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனை தொண்டர்ந்து இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த அஸ்வின்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இயக்குனர் தருண் தேஜா இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். புது டெக்னாலஜி கண்ணோட்டத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

யார் இந்த வசந்த் ரவி :

இதனை அடுத்து தற்போது ரஜினி நடிப்பில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் ரஜினியின் மகனாக போலீஸ் அதிகாரியாக வசந்த் ரவி நடித்திருக்கிறார். இந்த படம் வசந்த ரவியின் திரைவாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் வசந்த் ரவி குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

வசந்த பவன் குழுமும் :

வசந்த் ரவி வேறு யாரும் இல்லை தமிழகத்தில் பல்வேறு கிளைகள் கொண்ட மிகவும் பாரம்பரிய மிக்க ஹோட்டல் குழுமமான நம்ம வீடு வசந்த பவன் நிறுவனர் ரவி முத்துகிருஷ்ணனின் மகன் தான் இந்த வசந்த் ரவி. தமிழகத்தில் இவர்களது ஹோட்டல்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சமீபத்தில் தான் இந்த குழுமத்தின் 50 ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது ஸ்விக்கி, zomato டெலிவரி செய்பவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களை கவுரவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வசந்த் ரவி குடும்பம் :

இவ்வளவு வசதியான குடும்பத்தில் பிறந்த வசந்த் ரவி இங்கிலாந்தில் Health Care Management படிப்பை முடித்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி இருக்கிறார், பின்னர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு வாய்ப்பு தேடி இருக்கிறார். அப்போது தான் இவருக்கு இயக்குனர் ராம், தரமணி படத்தின் மூலம் இவரை சினிமாவில் அறிமுகம் செய்து இருக்கிறார்.

வசந்த் ரவியின் மனைவி :

அதுமட்டுமல்லாமல் வசந்த் ரவிக்கு திருமணமும் ஆகி இருக்கிறது. இவர் சினிமாவில் நுழையும் முன்னர் அதாவது இவரது முதல் படமான தரமணி 2017 ஆம் ஆண்டு தான் வெளியானது. ஆனால், இவருக்கு 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் ரிஷிதா என்ற பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் கூட இந்த திருமணத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement