கூலி படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கும் நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதோடு சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் வீடியோவில் ரஜினி பேசிய பழைய வசனம் இடம்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு இந்த டீசரில் இடம்பெற்ற இசையால் புதிய சர்ச்சையை படக்குழு சந்தித்து உள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த இசையை தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்திற்கு அனிருத் பயன்படுத்துகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் அனிருத் ரஜினியின் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கு இளையராஜா அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதோடு இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும், இல்லை என்றால் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement

கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் Copyright என்றால் என்ன என்று ஜேம்ஸ் வசந்தன் நீளமான விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் Royaltyக்கும் Copyrightக்கும் உள்ள வித்யாசம் குறித்து ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘Copyright வேறு Royalty வேறு.Copyright என்பது ஒரு படைப்பாளிக்கு அந்தப் படைப்புக்கான உரிமையை பாதுகாத்துக் கொடுப்பது. வேறு யாரும் அதற்கு பொய்யாக சொந்தம் கொண்டாடக்கூடாது என்பதற்காக.

Advertisement

Royalty என்பது அந்தப் படைப்பு சந்தையில் விற்கப்படும்போது வருகிற லாபத்தில் பங்கு. *எழுத்து, ஓவியம், இசை இம்மூன்றுக்கும்தான் Copyright அம்சம் உலகம்முழுதும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. *இவற்றில் எழுத்து, ஓவியம் இரண்டுக்குமான காப்புரிமைச்சட்டம் உலகின் எந்தப்பகுதிக்கும் பொருந்தும்.*ஆனால், குழப்பம் நிகழ்வதே இசையில்தான். அதற்குக் காரணம் பிற நாடுகளிலுள்ள இசைச்சட்டம் இந்திய இசைச்சூழலுக்குப் பொருந்தாததே.

அங்கு, தனித்து நிற்கிற இசை இந்தியாவில் திரைப்படம் என்கிற பெரிய வட்டத்துக்குள் வந்துவிடுவதும், இது உருவாகும் வேறுபட்டச் சூழலுமே. ஆனால், அந்தத் தனியிசைச் சட்டத்தை அப்படியே இங்கு கொண்டு வந்து வைத்திருப்பதுதான் இந்தப் பெருங்குழப்பத்துக்குக் காரணம். இதை உணராமல் ஏன் திரைப்படத் துறையும் இப்படி இழுத்துக்கொண்டே போகிறதென்று தெரியவில்லை!அதை சரிசெய்யாத வரை இது இருட்டறைக்குள் வாளை சுழற்றுவது போல்தான்.

Advertisement