மியூசிக் டீச்சராக இருக்கும் போது 7 ஆம் வகுப்பு படித்த சசி குமார் சொன்ன விஷயம் - சுப்ரமணியபுரம் வாய்ப்பு குறித்து ஜேம்ஸ் வசந்தன் சொன்ன உருக்கமான கதை.

By Rajkumar · 5/7/2022

90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். இவர் இசையமைப்பார் என்று தெரிய வந்ததே சுப்ரமணியபுரம் படம் மூலம் தான்.

பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஆனால், சுப்ரமணியபுரம் படம் ரீச் ஆன அளவிற்கு வேறு எந்த படமும் இவருக்கு புகழை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. அந்த படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க, கண்கள் இரண்டாம் போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த படம் வெளியாகி நேற்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.

இதையும் பாருங்க : ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம் - பொண்ணு யார் தெரியுமா ?

14 ஆண்டுகள் நிறைவு :

தமிழில் சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம்தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜெய் சசிகுமார் சமுத்திரகனி சுவாதி கஞ்சா கருப்பு போன்ற பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது.

ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு :

மேலும், இந்த திரைப்படம் நடிகர் ஜெய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது. நட்பு காதல் மற்றும் துரோகம் போன்றவற்றை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நேற்றோடு 14 வருடங்களை கடந்ததை நினைவு கூர்ந்து இந்த படத்தின் நினைவுகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

https://twitter.com/chettyrajubhai/status/1544323439896379392

கனவு நடந்தேறிய நாள் :

அதில் '14 வருடங்களுக்கு முன் இதே ஜூலை 4. என் வாழ்க்கைக் கனவு நடந்தேறிய நாள். 'சுப்ரமணியபுரம்' படம் வெளியான நாள்கடவுளுக்கும், என் இயக்குனர் சசிகுமாருக்கும், அந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், மக்கள் என்னை இனங்கண்ட 'கண்கள் இரண்டால்' பாடலை எழுதிய கவிஞர் தாமரைக்கும், பாடிய தீபா மிரியம் மற்றும் பெள்ளி ராஜுக்கும், அந்தப் பாடலில் பணியாற்றிய இசைக்கலைஞர்களுக்கும், அதைக் கொண்டாடி என்னை இந்த இடத்தில் அமரவைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

வாய்ப்பு கிடைத்தது எப்படி :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று ஜேம்ஸ் வசந்தன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஜேம்ஸ் வசந்தன் கொடைக்கானலில் மியூசிக் டீச்சர் ஆக இருந்தபோது ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவனான சசிகுமார் எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை நீங்க பெரிய மியூசிக் டைரக்டர் ஆகிவிடுவீர்கள் நான் சினிமாவிற்கு இயக்குனராக வரும்போது நீங்கள் என் முதல் படத்திற்கு இசையமைக்க மறுக்கக்கூடாது என்று சொன்னான் ஆனால் அந்தப் பையன் தான் எனக்கு முதல் பட வாய்ப்பு தந்தான் அதுதான் சசிகுமார் என்று பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full