ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம் – பொண்ணு யார் தெரியுமா ?

0
1162
rajini
- Advertisement -

ரஜினி சீரியலில் பார்த்திபன் திருமணம் செய்துகொள்ளும் பெண் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட் ரேடிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு புது புதிதாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பெரிய குடும்பத்தின் சுமையை தனியாக தாங்கி நிற்கும் பெண் தான் ரஜினி. வீட்டில் அனைத்து செலவும் அவள் தான் பார்த்தாக வேண்டும். குடும்பத்துக்காக தன்னுடைய ஆசைகளை துறந்து கதாநாயகியாக ரஜினி இருக்கிறார். ஆனால், இவருடைய குடும்பம் இவருக்கு என்ன செய்கிறது? என்பது தான் சீரியலின் கதை களம்

- Advertisement -

மேலும், இந்த தொடரில் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் கதாநாயகி தான். இவர் இதற்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்திருந்தார். பின் இவர் திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த ரஜினி தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களும் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது சீரியலில் ரஜினி-பார்த்திபன் இருவரும் காதலித்தார்கள். அது பார்த்திபனின் அக்கா அனிதாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அனிதா, ரஜினியிடம் என் தம்பியை பிடிக்கவில்லை என்று பொய் சொல்ல சொல்லி சத்தியம் வாங்கி கொள்கிறார்.

-விளம்பரம்-

ரஜினியும் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்த்திபனுடன் இருந்த காதலை தியாகம் செய்கிறார். ஆனால், பார்த்திபன் தன்னுடைய காதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த நேரத்தில் பார்த்திபனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமணத்திற்கு நகை எடுப்பது, ஆடைகளை வாங்குவது என எல்லாவற்றிலுமே ரஜினி உற்சாகத்துடன் செய்கிறார். பார்த்திபன் திருமண நிகழ்வுகளும் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சடங்குகளிலும் ரஜினி ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பின் பார்த்திபன் கல்யாண மண்டபத்தில் ரஜினியை பார்த்து கடைசியாக தனது காதல் குறித்து கேட்க அதற்கு ரஜினி என்ன பதில் சொல்லப்போகிறார்? செய்த சத்தியத்தை மீறி பார்த்திபன் காதலை ஏற்று கரம் பிடிப்பாரா? என்ற கோணத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவரால் சீரியலில் மிகப்பெரிய டீவ்ட் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பார்த்திபன், ரஜினியை திருமணம் செய்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement