90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

Advertisement

ஜேம்ஸ் வசந்தனும் தமிழ் பற்றும் :

மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இவர் தமிழ் மீது முகுந்த பற்று கொண்டவர்.

இசை வடிவில் திருக்குறள் கடவுள் வாழ்த்து :

தன்னுடைய சமூக வலைதளத்தில் கூட அடிக்கடி பல ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் சொல்லை மக்களுக்கு தெரியப்படுத்தியும் வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய குழுவுடன் இணைத்து திருக்குறளின் இசை வடிவ பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதாவது திருக்குறளை பாடல் வரிகளாக அமைத்து இருக்கிறார். இதற்கு ‘இசை வடிவில் திருக்குறள் கடவுள் வாழ்த்து’ என்று தலைப்பு வைத்து இருந்தார்.

Advertisement

விஜய் சேதுபதி ஏன் :

இந்த வீடியோவை தனது யூடுயூப் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை விஜய் சேதுபதி வெளியிடுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இதற்கு முகநூல் வாசி ஒருவர் ”விஜய் சேதுபதி வெளியிடுகிறார் என்பதே மனது வலிக்கிறது. வேறு ஒரு நல்ல தமிழ் பற்றாளரை அழைத்திருக்கலாமே” என்று கமன்ட் செய்து இருந்தார்.

Advertisement

ஜேம்ஸ் வசந்தனின் பதிலடி :

இதற்க்கு பதில் அளித்த ஜேம்ஸ் வசந்தன் ‘தமிழனாகிய எனக்கு அந்தப் பிரச்சனையில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒஸாமா பின் லேடனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் அவர் நடிக்கக் கூடாதா? என்று பதிவிட்டுள்ளார். மேலும், உங்கள் நாட்டில் உங்களை ஆள்பவர் எல்லாருமே மேலிருந்து கீழ் வரை இழி காரியங்களைத் தொடர்ந்து செய்பவர்கள். நீங்கள் சகித்துக் கொண்டுதானே வாழ்கிறீர்கள் ? உங்களுக்கு வசதியானவற்றில் விட்டுக்கொடுக்கும் சுயநலம் பிறரை மட்டும் தாக்கும் பொதுநல்ம் சரியா ? என்றும் கூறியுள்ளார்.

Advertisement