பெரியார் குறித்து தனது முகநூல் பக்கத்தில் போட்ட பதிவை ஜேம்ஸ் வசந்தன் நீக்கி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சியில் தான். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சென்னையில் உள்ள கொட்டிவாக்கத்தில் வசித்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சுகந்தி என்ற பெண்ணை 1991 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும், இவர்களுக்கு ஷில்பா என்ற ஒரு மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளார்கள். இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

Advertisement

ஜேம்ஸ் வசந்தன் திரைப் பயணம் :

மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து பல விதமான சமூக பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு குறித்தும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பெரியார் குறித்து பதிவிட்டு இருந்தார்.

அதில் ‘இறைநம்பிக்கை இல்லாதவர் ‘கடவுள் உண்டா இல்லையா? படைப்பா பரிணாமமா?’ என்கிற விவாதத்துக்குள் செல்லவேண்டாம் என்பது என் அறிவுரை.முதல் காரணம், அது முடிவற்ற விவாதம். நேரம்தான் வீண். இரண்டாவது, நம்பிக்கை உள்ளவர்கள் ‘கடவுள் சர்வ வல்லவர், எல்லாவற்றையும் படைக்க அவருக்குத் திராணியுண்டு’ என்று சொல்லிவிட்டால் அத்தோடு அவர்கள் வாதம் முடிவுறும். அதற்குள் எல்லாம் அடக்கம். ஏனெனில், அது நம்பிக்கை அடிப்படையிலானது.ஆனால், அறிவியல் அப்படியல்ல.

Advertisement

நாத்திகர்கள் அதிகமான மூடநம்பிக்கைக் கொண்டவர்கள்

ஒவ்வொரு கூற்றையும் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால்தானே அறிவியல். நிரூபிக்க வேண்டியது அறிவியல்தான், நம்பிக்கையல்ல. ஆனால் பாவம், நீங்கள் எங்கே போவீர்கள்! அதனால், இதைப்போன்ற வாதங்களை நீங்கள் அறவே தவிர்த்துவிடுவது நல்லது.ஆனால், ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிகமான மூடநம்பிக்கைக் கொண்டவர்கள். ஏதோ ஒரு அறிவியல் மேதை எங்கோ சொன்னது சரியாகத்தான் இருக்கும் என்கிற அதீத நம்பிக்கையில்தானே நாத்திகராக வாழ்கிறார்கள்.

Advertisement

இதையெல்லாம் தாண்டி ‘கடவுள் இல்லவே இல்லை’.. ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று சொன்ன பெரியாரை நான் பெரிதும் மதிக்கிறேன். இதைச் சொன்னதற்காக அல்ல.. என் தமிழ் சமூகத்துக்கு விடுதலை தேடித் தந்ததற்காக. ஒடுக்கப்பட்ட இனத்துக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்ததற்காக. அஞ்சி நின்றவர்களைத் தட்டியெழுப்பியதற்காக.என்றும் என் இனத்தின் தலைவன் அந்தக் கிழவன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

பதிவை நீக்கிய ஜேம்ஸ் வசந்தன் :

ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், ஒரு சிலர் இவர் கிரிஸ்துவர் என்பதால் தான் இந்து மத நம்பிக்கை பற்றி இப்படி பேசுகிறார் என்றும் விமர்சனத்தை முன் வைத்தனர். இப்படி ஒரு நிலையில் பெரியார் குறித்து போட்ட அந்த பதிவை தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கிறிஸ்துவத்தில் மத மாற்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இவர் போட்ட பதிவு பெரும் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement