நடிகர் விக்ரமிடம் தரமற்ற கேள்விகளை கேட்டதற்காக பத்திரிகையாளர்களை விமர்சித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்ன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக 'தங்கலான்' குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் 'தங்கலான்'. கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பத்திரிக்கையாளரின் கேள்வி:
இப்படம் வெளியாவதற்கு முன்பு, பிரமோஷனுக்காக விக்ரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பத்திரிக்கையாளர் ஒருவர், விஜய், அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் உங்களுக்கு இல்லையே? காரணம் என்ன? என்று நடிகர் விக்ரமிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு விக்ரம், எனக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அது உங்களுக்கு தான் தெரியவில்லை. ரசிகர்கள், ஜெனரல் ஆடியன்ஸ் என்று நிறைய பேர் எனக்கு இருக்கிறார்கள் என்று பதில் அளித்திருந்தார்.
https://www.youtube.com/shorts/BxpKagcoTSY
அரங்கமே அதிர்ந்தது:
இதுபோல் நடிகர் விக்ரம் பத்திரிக்கையாளருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போதே, கூட்டத்தில் இருந்த விக்ரமின் ரசிகர் ஒருவர், நீங்க சொன்ன நடிகர்களுக்கு நிறைய haters இருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய நடிகர் விக்ரமுக்கு தான் haters கிடையாது என்று பத்திரிக்கையாளரிடம் கூறினார். ரசிகரின் இந்த பதிலை கேட்டு அரங்கமே கைத்தட்டி கர கோஷம் போட்டது. சமீபத்தில் இந்த வீடியோ தான் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் வசந்தன் பதிவு:
தற்போது இந்த சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், 'தங்கலான்' பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்ரமிடம் ஒரு பத்திரிக்கையாளர், 'அஜித்துக்கும், சூர்யாவுக்கும் இருக்கக்கூடிய அளவுக்கு உங்களுக்கு ஏன் ரசிகர்கள் இல்லை?' என்று கேட்டிருக்கிறார். எதையாவது கேட்டு அடையாள பட வேண்டும் என்கிற நமைச்சல் இதைப் போன்ற பொருளற்ற கேள்விகளை கேட்க வைக்கிறது சில முதிர்ச்சியற்ற பத்திரிக்கையாளர்களை என்று விமர்சித்துள்ளார். மேலும், இதுதான் இன்றைய பத்திரிக்கை தரம் என்றும் குறிப்பிட்டார்.

ஜேம்ஸ் வசந்தன் குறித்து:
90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். மேலும் இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன் போன்ற படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். குறிப்பாக, இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.






