பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜனனி கதாநாயகியாக நடிக்கும் முதல் படம்.! ஹீரோ யார் தெரியுமா.!

By Rajkumar · 23/1/2019

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஐஸ்வர்யா , யாஷிகா இருவரும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகையாக சென்ற ஜனனி வெளியே வந்தவுடன் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்து வந்தார்.

2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.  ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 2009 ஆம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் வருவதற்கு..3 நாட்களில் ஜனனி செய்து முடித்த வேலை.! 

அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிட்டியது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது ஜனனிக்கு மீண்டும் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குகிறார்.

மேலும், இதில் ஜனனிக்கு ஜோடியாக அசோக் செல்வன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'தெகிடி ' படத்தில் ஜனனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகளும் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full