பிக்பாஸ் வருவதற்கு..3 நாட்களில் ஜனனி செய்து முடித்த வேலை.!

0
72
janani-iyer
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வேறை நடிகர் நடிகைகளின் ஆடைகள் தான் மக்களின் அதிக கவனத்தை ஈர்க்கிறது. அதிலும் நடிகைகள் அணிந்து வரும் ஆடை தான் பெண்கள் மத்தியில் மிகவும் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருந்து வருகிறது.

Bigg-boss-janani

அந்த வகையில் நயன்தாரா முதல் பிக் பாஸ் ஜனனி வரை அவர்கள் தனிப்பட்ட முறையில் அணியும் ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருபவர் தான் திவ்யா. சென்னையில் தாமரா போட்டிக் என்ற துணி கடையை வைத்திருக்கும் இவர் ஜனனியின் நெருங்கிய நண்பராவார்.

- Advertisement -

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல்வேறு நடிகைகளும் இவரது கடையில் தான் துணிகளை வாங்குவார்களாம். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி அணியும் ஆடைகள் அனைத்தும் திவ்யா தான் டிசைன் செய்து தந்துள்ளார்.

actress janani

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக திவ்யாவின் கடைக்கு சென்றுள்ள ஜனனி, மூன்று நாட்களில் நான் பிக் பாஸ் செல்ல இருக்கிறேன் அதனால் எனக்கு சில ஆடைகள் வேண்டும் என்று திவ்யாவிடம் கூறியுள்ளார். மூன்று நாட்களுக்குள் ஜனனிக்கு தனது கடை ஊழியர்கள் மூலம் 50 ஆடைகளை தயார் செய்து கொடுத்துள்ளார் திவ்யா.

Advertisement