விஜய்யின் வாரிசு படம் நல்லெண்ணத்தை வழங்கும் படமாக இருந்தால் நன்றாக இருக்குமென்று ஜெயவர்தன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர்.

Advertisement

வாரிசு படம்:

இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். மேலும், விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கொண்டிருந்தார்கள். ஆனால், இதை வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த தலைப்பு குறித்து பலரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக அரசியலின் நிஜமான வாரிசான ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனிடம் பேட்டி எடுக்கப்பட்டிருந்தது.

ஜெயவர்தன் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, வாரிசுகளின் பட்டியலில் என்னை சேர்க்காதீர்கள். நான் அரசியல்வாதி கிடையாது. என்னை அம்மா தான் வேட்பாளராக தேர்வு செய்தார். நான் படங்கள் எல்லாம் ரொம்ப பார்க்கமாட்டேன். குழந்தையாக இருக்கும்போது வீட்டில் புரட்சித்தலைவரின் பாடல்களை தான் கேட்டேன். இப்போதும் அப்படி தான் கேட்கிறேன். நான் இளம் வயது என்றாலும் தியேட்டர் பக்கம் சென்றதே இல்லை. ஆனால், புத்தகங்களை படிப்பேன். அஜித், விஜய், ரஜினி என யாருடைய ரசிகரும் நான் கிடையாது.

Advertisement

விஜய் குறித்து சொன்னது:

ஆனால் , விஜய் ஓட வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் வந்திருப்பதாக கட்சிக்காரர்கள் சொல்லி இருந்தார்கள். புரட்சித்தலைவர் மக்களிடையே தன்னுடைய படங்கள் மூலம் நல்லெண்ணம் விதைக்கும் கதைகளை வாரி வாரி வழங்கி இருந்தார். அவரை போலவே நல்லெண்ணங்களை மக்களுக்கு வாரி வாரி வழங்கும் கதையில் விஜய் நடிக்க வேண்டும். வாரிசு படம் நல்லெண்ணத்தை வாரி வழங்கும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதே போல முந்தைய படங்கள் போல் இல்லாமல் வாரிசு தயாரிப்பாளர்களுக்கு செல்வங்களை வாரி வாரி கொடுக்கின்ற படமாக வாரிசு அமைய வேண்டும்.

Advertisement

வாரிசு போஸ்டர் குறித்த சர்ச்சை:

வாரிசு போஸ்டர் குறித்து மிகப் பெரிய விவாதமாக ஆகியுள்ளது. ஒற்றை தலைமை இன்றைய காலகட்டத்திற்கு தேவையானது. கலைத்துறையில் விஜய் உடைய பங்களிப்பு முக்கியமானது. அவரை சினிமாவில் ஒற்றை தலைமையாக அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் இப்படி ஒரு தலைப்பை அவர்கள் போட்டிருக்கிறார்கள். மற்றபடி இதனை நான் அதிமுகவை சீண்டுவதாக பார்க்கவில்லை. விஜய் என் தொகுதியில் தான் இருக்கிறார். ஆனால், நான் அவரை சந்தித்தது இல்லை. அவருடைய அம்மா என்னுடைய அம்மாவுக்கும், சகோதரிக்கும் நல்ல நெருக்கம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement