தெலுங்கின் முதல் ‘ஏ’ சான்றிதழ் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயலலிதா. என்ன படம் தெரியுமா ?

0
841
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மற்றும் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா. இவர் தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்குமுன்னரே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். ஆனால் கதாநாயகியாகி அறிமுகமாகிய படம் வெண்ணிற ஆடை தான். இவர் 1961ஆம் ஆண்டு தன்னுடைய 12 வயதிலேயே ஸ்ரீ ஷைலா மகாத்மே என்ற கன்னட படத்தில் பார்வதியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் ஹிந்தி மொழியில் வெளியான மெளஜி என்ற படத்தில் கிருஷ்னராகவும் நடித்திருந்தார். பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். பின்னர் 1964ஆம் ஆண்டு வெளியான சிப்பி ஜக்கன்னா திரைப்படத்தில் நடக மங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படம் அப்போது கனடா மொழியிலும் வெளியானது. பின்னர் ஜெயலலிதாவின் நடன திறமையைக் கண்ட பி.ஆர்ப்பந்தலு இவருக்கு சின்ன கொம்பு படத்தில் இரண்டாவது கதாநாயக வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

இந்த படமும் தமிழ் சினிமாவின் நடிகர் திலகமாகிய சிவாஜி கணேஷின் நடித்திருந்த முரடன் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படம் வெற்றி பெறவே ஜெலயலலிதாவிற்கு கல்யாண் குமார் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார். பின்னர் தான் தமிழ் மொழியில் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி நாங்கு மாதங்களில் இவரின் நடிப்பில் வெளியான படம் தான் மனசுலு மமதலு.

மேலும் இப்படம் தான் தெலுங்கு சினிமாவில் முதல் சென்சாரில் “ஏ” சான்றிதழ் வாங்கிய திரைப்படமாகும். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் நடித்த மர்மயோகி திரைப்படம் தமிழ் சினிமாவில் “ஏ” சான்றிதழ் வாங்கிய திரைப்படமாகும். மர்மயோகி படத்தில் பேயாக ஒருவர் தோன்றுவார் அதனால்தான் இப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டது. இதே போல தான் ஜெயலலிதா நடித்த மனசுலு மமதலு திரைப்படத்திற்கும் “ஏ” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்டுகிறது.

-விளம்பரம்-

மேலும் இப்படம் மூன்று தேசிய விருதுகளை தட்டி சென்றது. அதோடு சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதையும் தட்டி சென்றது. இப்படத்தை பிரத்யாகாத்மா இயக்கியிருந்தார். அதோடு இப்படத்தில் ராஜ ஸ் பாலியல் தொழிலாளியாக நடித்தது கூட இப்படத்திற்கு “ஏ” சான்றிதழ் கிடைப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஜெயலலிதா குழந்தை மற்றும் நாயகியாக கன்னட படங்களில் அறிமுகமானாலும் .

இவர் தெடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மற்றும்தான் தொடர்ந்து நடித்தார். மேலும் தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவைப் போன்று ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்தாக இருந்தது. இருந்ததினால் தான் தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் ஜெயலலிதாவின் படத்திற்கு “ஏ” சான்றிதழ் கிடைத்து என்று கூட சொல்லலாம்.

Advertisement