சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் வந்தவர்கள் தான் நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுடைய அப்பா கனவை நிறை வேற்றி விட்டோம் என்று பூரிப்புடன் பேசி உள்ளார்கள். சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர், எடிட்டர் ஆக பணிபுரிந்தவர் மோகன். இவருடைய மகன்கள் தான் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி மோகன். மேலும்,மூத்த மகன் மோகன் ராஜா திரைப் படங்களை இயக்கும் இயக்குனராக பணி புரிகிறார். மேலும், இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். இளைய மகன் ஜெயம் ரவி பற்றி சொல்லவா?? வேண்டும். இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். மேலும், இவருடைய எல்லா படங்களும் பிளாக் பஸ்டர் படம் தான். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் உள்ளது. மேலும், சமீபத்தில் இவர் நடித்து வெளி வந்த ‘கோமாளி’ படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

இந்நிலையில் தயாரிப்பாளர், எடிட்டர் மோகன் அவர்கள் தற்போது ‘தனிமனிதன்’ என்ற ஒரு புத்தகத்தையும், அவரது மனைவி வரலட்சுமி மோகன் என்பவர் ‘வேலியற்ற வேதம்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்கள். இந்த இரு புத்தகங்களும் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி பிரம்மாண்ட அளவில் கோலாகலமாக வெளியிடப் படுகிறது என்ற தகவலை அறிவித்து உள்ளார்கள். மேலும், இது குறித்து மோகன் ராஜாவும், ஜெயம் ரவியும் பேட்டி ஒன்று அளித்து உள்ளார்கள். அதோடு இந்த பேட்டியில் ஜெயம் ரவி அவர்கள் கூறியது, என்னுடைய அப்பா நடிகராக, இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு தான் சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எடிட்டர் ஆகிவிட்டார். அதனால், நீங்கள் இரண்டு பேரும் என்னுடைய கனவான டைரக்டராகவும், நடிகராகவும் ஆவது தான் என்று என் அப்பா அடிக்கடி எங்களிடம் கூறுவார். அது மட்டுமில்லாமல் ரேஸில் 4 சுற்றுகள் ஓடினால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால், என்னுடைய அப்பா 3 சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடி ஜெயிக்கிற நிலைமைக்கு என் கிட்ட இறுதிச்சுற்றை கொடுத்தார்.

இதையும் பாருங்க : என்னது கடைக்குட்டி சிங்கம் சீரியல் ஷிவானிக்கு இவ்வளவு வயசா ? நம்பரமாதிரி இல்லையே.

அதனால் தான் நாங்கள் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும். மேலும், நாங்கள் அந்த வாய்ப்பை ஒழுங்காகவும் சரியாகவும் செய்து முடிப்போம் என்று ஜெயம் ரவி கூறினார். இதனை தொடர்ந்து மோகன் ராஜா அவர்கள் கூறியது,எங்களுடைய குடும்பத்தின் முக்கிய நிகழ்வாக இந்த விழா இருக்கப் போகிறது. மேலும், என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தையால் கூற முடியவில்லை. என்னுடைய அப்பா, அம்மா இருவருமே அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார்கள். அம்மாவை பொறுத்த வரை எப்போதுமே அப்பாவைப் பற்றிய பேச்சு தான். அப்பாவை பற்றி பேசினாலே போதும் அம்மாவின் வாழ்க்கை முழுமையடைந்து விடும் என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் தான் அவருடைய அறிவு பக்கத்தை நூலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement

சினிமா உலகில் கருப்பு, வெள்ளை காலத்திலிருந்தே அப்பாவுடைய அனுபவம் பெரியது. அதுமட்டுமில்லாமல் இவர் சென்னைக்கு நடந்தே வந்து சேர்ந்தார். மேலும், சென்னை வந்து சின்ன சின்ன வேலைகள் செய்து தான் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு உயர்ந்து உள்ளார். மேலும், அவருடைய அனுபவங்களை அனைத்தையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். மேலும், நாங்கள் எங்கள் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் காரணம் என்ன என்பதற்கான பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது என்று புன்னகையுடன் கூறினார்.

Advertisement