கேட்க வேற கேள்வியே இல்லாதது போல வெள்ளை முடி குறித்து கேட்ட மும்பை பத்திரிக்கையாளர், ஜெயம் ரவியின் பங்கமான பதில்.

0
791
Jayamravi
- Advertisement -

வெள்ளை முடி குறித்து கேட்ட இந்தி பத்திரிக்கையாளருக்கு ஜெயம் ரவி பங்கமாக பதில் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-
ponniyin

ந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

மும்பையில் ப்ரோமோஷன் :

இந்த திரைப்படம் இந்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் வெளியாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று இந்த படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது பொன்னியின் செல்வன் படைக்குழு. அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பட குழு மும்பை சென்று இந்த படத்தை ப்ரோமோஷன் செய்தது. இதில் மணிரத்தினம், விக்ரம். ஜெயம் ரவி. ஐஸ்வர்யா லட்சுமி. ஐஸ்வர்யா ராய். திரிஷா. கார்த்தி என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

வெள்ளை முடி குறித்து கேட்ட நிரூபர் :

இந்த நிலையில் இந்த பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் ஒருவர் ஜெயம் ரவியின் வெள்ளை முடி குறித்து கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி உங்களுக்கும் தான் வெள்ளை முடி இருக்கிறது. உங்களுக்கு ஆனது போல எனக்கும் வெள்ளை முடி ஆகிவிட்டது என்று பங்கமாக பதில் அளித்து இருந்தார். இதனைக் கேட்ட திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் விழுந்து விழுந்து சிரித்து விட்டனர்.

Advertisement