கமல், விக்ரமிற்கு பின் 9 கெட்டப்பில் நடிக்கப் போகும் முன்னணி நடிகர்.! யார் தெரியுமா?

0
709
Kamal-Vikram
- Advertisement -

பெரும்பாலும் நடிகர்கள் ஒரே படத்தில் பல்வேறு கெட்டப்பில் நடித்தால் அது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடுகிறது. அந்த காலத்தில் சிவாஜி அவருக்குப் பின்னர் கமல், அதற்குப் பின்னர் விக்ரம் என்று குறிப்பிட்ட சில நடிகர்கள் தான் ஒரே படத்தில் பல்வேறு கெட்டப்பில் நடித்த நடிகர்கள் அவர்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ஜெயம்ரவியும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். அடங்கமறு படத்திற்கு பின்னர் நடிகர் ஜெயம்ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குறும் பட இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு 9 கெட்டப் இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : பட வாய்ப்புகளை பிடிக்க மோசமான உடையில் இறுதி சுற்று நடிகை நடத்திய போட்டோ ஷூட்.! 

- Advertisement -

இந்த படம் குறித்து பேசிய அவர், ஜெயம்’ படத்திலிருந்து ’அடங்கமறு’ படம் வரைக்கும் ரவி சார் நிறைய படங்கள் பண்ணிட்டார்; பல ரோல்கள் பண்ணிட்டார். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் அவருக்கு 8 கெட்டப்ஸ். அதில் ஒரு கெட்டப்புக்காக 18 கிலோ எடை குறைச்சிருக்கார். முதலில் ஏதாவது க்ராபிக்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.

அவர்தான், `இல்ல… இதை நானே பண்றேன்’னு சொன்னார். இந்த லுக் வெளியில வரும் போது எல்லாருக்குமே ஆச்சர்யமா இருக்கும். படம் முழுக்கவே காமெடிதான்; ரொம்ப ஈடுபாடோட வொர்க் பண்ணிட்டு இருக்கார் என்று கூறியுள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement