ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த இந்த நடிகை யாருன்னு தெரியுதா ? பாத்தா ஷாக்காகிடுவீங்க.

0
13337
saranya
- Advertisement -

தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் சந்தியா. அதேபோல நடிகர் பரத்திற்கு இந்த படம் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தான் தயாரித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையை மறக்க முடியுமா என்ன ?

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-129.jpg

அவருடைய பெயர் சரண்யா நாக், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். ஆனால், காதல் படத்தில் இவர் தான் முதலில் கதாநாயகியாக நடிக்க தேர்வாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : கார்த்தி படத்தில் அக்மார்க் நீச்சல் உடையில் நடித்துள்ள சீரியல் நடிகை தாரிகா.

- Advertisement -

ஆனால், இவர் மிகவும் சின்னப் பெண் போல இருந்ததால் இவரை இயக்குனர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இருப்பினும் காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்தாராம் இயக்குனர். காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் துள்ளுற வயசு, ஒரு வார்த்தை பேசுபோன்ற படங்களில் நடித்திருந்தார்.

10 Years of Peranmai: 20 facts you probably didn't know about Jayam Ravi's  landmark action-drama- Cinema express

மேலும், 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த படத்தை மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் தான் இயக்கி இருந்தார். அவரிடமே சரண்யா உதவியாளராக பணியாற்றி வந்தார. இப்படி ஒரு நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் படத்தில் பார்த்தது போல் அல்லாமல் உடல் எடை கூடி தோற்றத்தில் மாறியிருக்கிறார் சரண்யா.

-விளம்பரம்-
Advertisement