7 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவன் – அதுவும் டபுள் ஹீரோ கதையில். இன்னோரு ஹீரோ இவரா.

0
391
jeevan
- Advertisement -

ஜீவன்- நட்டி நட்ராஜன் இணைந்து நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடராஜன் சுப்பிரமணியன். இவரை எல்லோரும் நட்டி என்று தான் அழைப்பார்கள். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘யூத்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ப்ளாக் ஃப்ரைடே, ஜப் வி மேட், ராஞ்சனா உள்ளிட்ட பல இந்தி படங்களிலும் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நடிப்பில் வெளிவந்த நாளை, சக்கரவியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படத்திலும் நட்டி நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நட்டி நடராஜன் நடிக்கும் படம் சிக்னேச்சர்.

- Advertisement -

சிக்னேச்சர் படம்:

இந்த படத்தை எம் 10 ப்ரொடக்ஷன் சார்பில் எம் எஸ் முருகராஜ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே யாயா, பக்ரீத் ஆகிய திரைப்படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இளவரசு, ஹரிஷ் பெராடி உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நான் அவன் இல்லை ஜீவன் நடிக்கிறார்.

படம் குறித்த தகவல்:

ஜீவன் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த படம் கைநாட்டை பயன்படுத்தி செய்யும் சீட்டிங் பற்றி கூறுவது. மக்களோடு பழகி சாமானிய மக்களின் டேட்டாவை திருடும் கதாபாத்திரத்தில் ஜீவனும், அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடிகர் நட்டியும் நடிக்கிறார்கள். கைநாட்டை பயன்படுத்தி நடக்கும் மோசடியை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்படுகிறது.

-விளம்பரம்-

படத்தின் கதை:

மேலும், ஒவ்வொரு கைநாட்டும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் நோக்கிலும் இந்த படம் அமைந்துள்ளது என்பதை படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். தற்போது ஜீவன்- நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் சிக்னேச்சர் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யூனிவர்சிட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜீவன். அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

ஜீவன் திரைப்பயணம்:

இந்த படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவன் அதன் பின்னர் ஹீரோவாக நடித்த மச்சக்காரன் படம் தோல்விப்படமாக அமைந்தது. இறுதியாக ஜீவன் தமிழில் 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement