ரஜினியின் தங்கையாக பிரபல நடிகரின் மனைவி – 25 ஆண்டுக்கு பின் ரீ-என்ட்ரி. யார் தெரியுதா ?

0
764
- Advertisement -

25 ஆண்டுகளுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜெயில் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

லால் சலாம் படம்:

இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்கும் என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

படம் குறித்த புதிய அப்டேட்:

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடன் தெலுங்கு பிரபல நடிகரின் மனைவி லால் சலாம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மனைவியும் நடிகையுமாக இருப்பவர் ஜீவிதா. இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த வளைகாப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.

நடிகை ஜீவிதா குறித்த தகவல்:

அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினி உடன் ஜீவிதா படபிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த படத்தில் நடிகை ஜீவிதா அவர்கள் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் கதைக்கு முக்கிய திருப்புமுனையாக இவருடைய கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement