பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜெஃப்ரி போட்டு இருக்கும் குத்தாட்டம் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 84 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருவார்கள். இந்த வாரமே ரொம்ப எமோஷனலாக இருந்தது. அதிலும் சௌந்தர்யா, நடிகரும் முன்னாள் போட்டியாளருமான விஷ்ணுக்கு மேரேஜ் ப்ரோபோஸ் செய்ய, அதற்கு விஷ்ணு சம்மதம் சொன்னார்.

வெளியேறிய நபர்கள்:
மேலும், இந்த 12 வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, ஜெப்ரி, ஜாக்லின், மஞ்ஜரி, ராணவ், விஷால், பவித்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பிடித்து இருக்கிறது. இதில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு ஜெஃப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கானா பாடகராக அறிமுகமானவர் ஜெஃப்ரி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த சீசனில் ஜெஃப்ரி திறமையாக விளையாடி வந்திருந்தார்.

ஜெஃப்ரி பற்றிய தகவல்:
சில இடங்களில் சறுக்கல்கள் இருந்தாலும் இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேறி இருப்பது பலருக்குமே அதிருப்தி தான். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ஜெஃப்ரியை அவர் ஏரியா மக்கள் மேள தாளத்துடன் ஆர்ப்பாட்டமாக, ஆரத்தி எடுத்து எல்லாம் வரவேற்றுகிறார்கள். பின் இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
https://youtube.com/shorts/LQKIOMVJCNY?si=ZCpB9XrDrredOIMY
ஜெஃப்ரி வீடியோ:
தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மிக குறைவான சம்பளம் ஜெஃப்ரிக்கு தான் பேசப்பட்டிருந்தது. இவருக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என்று பேசப்பட்டது. இவர் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 83 நாட்கள் தங்கி இருந்தார். ஆக மொத்தம் எட்டு லட்சத்து 30000 ரூபாய் சம்பளம் ஜெஃப்ரிக்கு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.






