தனுஷ் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை ஜான்வி கபூர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், இயக்கி சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘இப்போல்லாம் எல்லாரும் ஹார்மோனி பெட்டிய தொட்டுடறாங்க’ – அசிங்கப்படுத்தியுள்ள இளையராஜா. பிரச்சனை குறித்து முதன் முறையாக மனம் திறந்த பாக்யராஜ்.

Advertisement

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த நிலையில் படக்குழு அடுத்த கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், வாத்தி, sir ஆகிய பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரேட் மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது.

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேசப்பட்டு இருந்தது. பின் அவர் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த நடிகை ஜான்வி கபூர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

தனுஷ் இயக்கி நடிக்கும் படம்:

தற்போது புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை அன்புச்செழியன் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இடம் படக்குழுவினர் அணுகி இருந்தனர். ஆனால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று ஜான்வி கபூர் மறுத்துவிட்டார். இதை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இந்தியில் இன்னொரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த நடிகை:

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு இந்தியில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அட்ரங்கி ரே படத்திலும் ஜான்வி கபூர் தான் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதற்கு பதில் தான் சாரா அலி கான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து தனுஷ் படம் என்றாலே வேண்டாம்? வேண்டாம்? என்று ஜான்வி கபூர் ஏன் பயப்படுகிறார் என்றே தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களைப் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement