‘இப்போல்லாம் எல்லாரும் ஹார்மோனி பெட்டிய தொட்டுடறாங்க’ – அசிங்கப்படுத்தியுள்ள இளையராஜா. பிரச்சனை குறித்து முதன் முறையாக மனம் திறந்த பாக்யராஜ்.

0
754
bhagyaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். பாக்கியராஜ் ஆரம்பத்தில் இயக்கிய படங்கள் அனைத்திற்க்கும் இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். ஆனால், இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு இந்த கூட்டணி அமையவில்லை.இந்த படத்திற்கு பாக்யராஜ் தான் இசையமைத்து இருந்தார். சொல்லப்போனால் இந்த படத்தில் தான் பாக்யராஜ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

மேலும், அந்த சமயத்தில் இளையராஜா பாக்கியராஜிடம் பெரும் கோபத்தில் இருந்ததாகவும் ‘இப்போல்லாம் எல்லாரும் ஹார்மோனி பெட்டிய தொட்டுடறாங்க ‘ என்று இளையராஜா விமர்சித்ததாக கூட சில பேச்சுகளும் எழுந்தது. இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ்க்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் குறித்தும், மீண்டும் அவர்கள் இணைந்ததை குறித்தும் பாக்யராஜ் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : திருமதி செல்வம் சீரியலில் வந்த இந்த நடிகையை நினைவிருக்கிறதா ? தற்போதும் எப்படி இருக்கார் பாருங்க. மாடர்ன் உடையில் அவர் கொடுத்த கலக்கலான போஸ்.

- Advertisement -

பாக்யராஜ் சொன்ன காரணம் :

அதில் அவர் கூறி இருப்பது, நான் இளையராஜா உடன் ‘சின்ன வீடு’ என்ற படம் வரைக்கும் பண்ணேன்.அடுத்த படம் பண்ணும்போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங் என்று இளையராஜா சொல்லியிருந்தார். பின் நான் கதை ரெடி அவர் எப்ப கேக்குறாரு என்று சொல்லுங்க அப்போ கம்போஸிங் வைத்து கொள்ளலாம் என்று அவர் அசிஸ்டென்ட் இடம் சொன்னேன். ஆனால், அந்த அசிஸ்டென்ட் திடீர் என்று சாரைப் போய் வீட்டில் பாருங்க என்று சொல்லிட்டார்.

நான் ஏன் வீட்டில் போய் பார்க்கணும் :

அதுக்கு நான் ஏன் வீட்டில் போய் பார்க்கணும். எப்போதும் நாங்கள் ஸ்டூடியோவில் தானே பார்த்து கொள்வோம் என்று சொன்னேன். பிறகு நான் அவர் வேலையாக இருந்தார் என்றால் அவர் எப்ப ஃபிரீயா இருப்பார் என்று சொல்லு அப்போது கம்போஸிங் வைத்து கொள்ளலாம் என்று சொன்னேன்.அந்த அசிஸ்டென்ட் மீண்டும் வீட்டுக்குப் போய் சாரைப் பாருங்க என்று சொன்னார். நான் வந்துட்டு போனேன்னு என்று சொல்லிவிடு என்று கூறி நான் கிளம்பி விட்டேன். நானும், இளையராஜாவும் வெளியே எத்தனையோ இடங்களில் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்திருக்கோம்.

-விளம்பரம்-

ராஜாவாவது ஏன்னு கேட்டு இருக்கனும் :

நான் கேட்கிற மியூசிக் அவர் போட்டு கொடுப்பார். மேலும், எங்களுக்குள் பட்ஜெட் பிரச்னை கூட வந்தது இல்லை. இது தான் முதல் முறை ஒருத்தர் வீட்டுக்குப் போய் பாருங்க என்று சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. உடம்பு சரியில்லை என்றால் சொல்லுங்க தாராளமாக வீட்டுக்குப்போய் பார்க்கலாம். படம் பண்றதுக்கெல்லாம் ஏன் வீட்டுக்குப்போய் பார்க்கணும்.அதற்கு அவர் முன்கூட்டியே சொல்லணும்னு என்று சொன்னார். ஆனால், நான் முன்கூட்டியே சொல்லிட்டேன். பிறகு ராஜாவாவது ஏன் பாக்யராஜ் வரலை? என்று கேட்டு இருக்கனும்.

அசிஸ்டென்ட் பையன் அவர்கிட்ட என்ன சொன்னார்னு தெரியல :

இந்த அசிஸ்டென்ட் பையன் அவர்கிட்ட என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அவரும் எனக்கு போன் பண்ணவில்லை. நானும் அப்படியே விட்டுட்டேன். பிறகு கங்கை அமரன் வந்து நீங்களும், ராஜா அண்ணணும் ஒண்ணா சேர்ந்து வேலை பார்க்கணும் என்று சொன்னார். அந்த நேரத்தில் நானும் அடுத்த படம் ‘ராசுக்குட்டி’ பண்ண ரெடியாக இருந்தேன். பிறகு நான் ஓகே அமர் என்று சொன்னேன். பின் இளையராஜாவும் ஓகே சொல்லி ‘ராசுக்குட்டி’ படத்துக்கு மியூசிக் பண்ணி கொடுத்தார். அங்க இருந்து தான் திரும்பவும் எங்கள் பயணம் ஸ்டார்ட் ஆனது என்று கூறினார்.

Advertisement