நடிகையும் டான்சருமான ஆனந்தி தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறது. பொதுவாக நடிகர்களை விட நடிகைகள் தான் திருமணத்திற்கு பின்னர் ஆள் அட்ரஸ் இல்லாமல் இண்டஸ்ட்ரியை விட்டு காணாமல் போய்விடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி புகழ் ஆனந்தி நினைவிருக்கிறதா ? விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் ஆனந்தி. சிவகார்த்திகேயன் போட்டியாளராக பங்குபெற்ற பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் இவர், சிவகார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அந்த சமயத்தில் பலர் வைரலாக பரவியது.

அப்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்தனர். அதன் பின்னர் தொலைக்காட்சியில் சீரியல் தொடர்களில் நடிக்கத்துவங்கினார். கார்த்திகை பெண்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் கனா காணும் காலங்கள் என்று தமிழில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த இவர் இதுவரை தாரை தப்பட்டை, மீகாமன், ராஜா மந்திரி வாலு போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், தமிழில் ரௌத்திரம். டமால் டுமீல். மீகாமன் போன்ற ஒரு சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இறுதியாக பறந்து செல்ல வா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதை தொடர்ந்து இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த ஆனந்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஆந்திராவில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது கூட நடிகர் ஆர்யா தான். அதுவும் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா ஆர்யாவீர். திருமணத்திற்கு பின் சின்னத்திரை பக்கம் வராமல் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட ஆனந்தி தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை தொடரில் என்ட்ரி கொடுத்ததார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் நிறைவடைந்து இருந்தது. மேலும், இந்த தொடர் 200 எபிசோடுக்கு மேல் ஓடியது. இந்த தொடருக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்தார் ஆனந்தி. அதற்கு முக்கிய காரணம் தற்போது ஆனந்தி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி இருக்கும் ஆனந்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு இருக்கிறார். மேலும், தன்னுடைய வளைகாப்பில் ட்ரெண்டிங் பாடலுக்கு ஆட்டம் போட்டு இருக்கும் ஆனந்தி அந்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.






