நாடு முழுதும் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா தொற்றால் பலர் இறந்து வருகின்றனர். பொது மக்களை போல தமிழ் திரையுலகிலும் பல்வேறு பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணமாகினர். ஆனால், பல்வேறு பிரபலங்கள் இந்த தொற்றில் இருந்து மீள முடியாமல் காலமாகிய சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இப்படி ஒரு நிலையில் பிரபல தொகுப்பாளினியான ஹேமா சின்ஹா குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பலியாகியுள்ளார். சன் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பித்த சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி ஜே-கள் அறிமுகமான காலத்தில் வசீகரமான தோற்றத்துடன் பல இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா. பிக் பாஸ் காஜல், ப்ரஜின், ஆனந்த கண்ணன் ஆகியோர் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்தில் விஜேவாக பணியாற்றியவர் தொகுப்பாளினி ஹேமா சின்ஹா.

இதையும் பாருங்க : தனது மனைவி மகள் மற்றும் மகளுடன் மானாட மயிலாட கோகுல். இப்போ இவர் என்ன பன்றார் தெரியுமா ?

Advertisement

சன் ம்யூசிக் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டம் முதல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், ராஜு முருகன் என்ற திரைப்பட இயக்குனரை காதலித்து வந்தார். ராஜு முருகன் வேறு யாரும் இல்லை. தமிழில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘குக்கூ’ படத்தை இயக்கியவர் தான்.மேலும், அந்த படத்தை தொடர்ந்து ‘ஜோக்கர் ‘ படத்தையும் இயக்கினார் ராஜு முருகன்.

ராஜுமுருகன் அண்ணன் குமரகுருபரன்

சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற ஜிப்ஸி திரைப்படத்தை இயக்கியதும் இவர் தான். ஹேமா சின்ஹா மற்றும் இயக்குனர் ராஜூ முருகனின் திருமணம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது, இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இப்படி ஒரு நிலையில் ராஜுமுருகனின் அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

Advertisement
Advertisement