தனது மனைவி மகள் மற்றும் மகளுடன் மானாட மயிலாட கோகுல். இப்போ இவர் என்ன பன்றார் தெரியுமா ?

0
6426
gokul
- Advertisement -

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் கோகுலும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் mime கலைஞராக இருந்தார். பின்னர் இவரது திறமையை பார்த்து கலா மாஸ்டர் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் இவர் நடனத்தைவிட பல வித்யாசமாக விதைகளை காட்டி பலரையும் வியக்க வைத்தார். இவர் நடன, ஜிம்னாஸ்ட்டிக், பிட்னஸ், மேஜிக், போர்ட் பேலன்ஸிங் என்று பல விதைகளை கற்றுத் தேர்ந்தவர்.

-விளம்பரம்-
May be an image of 3 people

- Advertisement -

‘அம்புலி’ படத்தில் மிருகமாக நடித்ததும் கோகுல் தான். இந்த தகவல் படம் வெளியாக சில காலம் கழித்து தான் பலருக்கும் தெரிந்தது. அம்புலி படத்திற்கு பின்னர் இவர், அந்த படத்திற்கு பின்னர் மகளீர் மட்டும், ஜம்புலிங்கம் 3டி, ஐரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் கோகுல். அதே போல இவர் தான் தமிழ் பிக் பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் என்று பலர் நினைத்ததுண்டு.

இதையும் பாருங்க : பல் மருத்துவராக மாறிய சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரபலம் – வரவங்க கிட்ட அந்த பாட்ட பாடாம இருந்தா சரி.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பலரும் நடனம் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் போது இவர் மட்டும் படு வித்யாசமான பல்வேறு திறமைகளை காட்டினார். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு முன் இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். நடனம் மட்டும் அல்லாது பல்வேறு திறமைகளை கொண்டவர் கோகுல்.

-விளம்பரம்-

தற்போது கோகுல் ‘Guta’ என்ற டேலண்ட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் சிறுவர்களின் தனி திறமைகளை கொண்டு வந்து அவர்களை அதில் சிறப்பானவர்களாக விளங்க வைக்கிறார் கோகுல். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் 4 கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார். மேலும், இவரது பள்ளியை சேர்ந்த மாணவர்களும் பல கின்னஸ் சாதனைகளை செய்துள்னனர்.

Advertisement