விஜய்யின் முதல் படத்தில் நான் நடித்தேன்..! பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.! யார் தெரியுமா.?

0
1277
George and vijay

விஜய் டிவியில் இருந்து பல்வேறு பிரபலங்கள் சினிமா துறைக்கு சென்றுள்ளனர். அந்த வரிசையில் கலக்க போவது யாரு, அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜோர்ஜ் தான் விஜய் டிவியில் வருவதற்கு முன்பாகவே சினிமாவில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

George

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறி படத்தில் நடித்தவர் ஜார்ஜ். அந்த படத்திற்கு பிறகு விக்ரம் வேதா என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார். தனது பயணத்தை காமெடியனாக தொடர்ந்த இவர் ஏற்கனவே விஜயுடன் படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இளையதளபதி விஜய் இன்று ஒரு மாஸ் ஹீரோ அவரும் பல ஆண்டுகள் தனது கடின உழைப்பின் மூலம் தான் இந்த இடத்தில் வந்திருக்கிறார். ஆரம்ப கால கட்டத்தில் பல படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்த விஜய் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 வெளியான நாளைய தீர்ப்பு என்ற படம் தான் .

maari

விஜயின் முதல் படமான அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று ஜோர்ஜ் கூறிருக்கிறார். மேலும் அந்த படத்தில் விஜய் பிறந்தநாள் கொண்டாடும் ஒரு காட்சியில் நான் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் விஜயை தான் லயோலா கல்லூரியில் படிக்கும் போதே பழக்கம் என்று தெரிவித்துள்ளார் ஜோர்ஜ் .