புதுப்பேட்டை படத்தில் தனுஷ் கதாபாத்திரம் தலித்தா? ஏன் அதை கேள்வி கேட்கவில்லை என்று சூர்யாவிற்கு ஆதரவாக பிரபல பத்திரிக்கையாளர் பதிவிட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெய் பீம் இருக்கிறது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

இதனால் இந்த படத்தை கண்டித்து வன்னியர் சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். மேலும், சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சில அரசியல் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் #westandwithsurya என்று பல பேர் சூர்யாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல பத்திரிக்கையாளர் செந்தில் அவர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக தனுஷ் படம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையும் பாருங்க : ‘நானும் வன்னியர் தான், ஆனா எங்க சமோகத்தினரே என்ன ‘-சூர்யாவிற்கு ஆதரவாக பேசியதால் சீரியல் நடிகர் சந்தித்து வரும் பிரச்சனை.

Advertisement

தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. அதில் அவர் கூறி இருப்பது, சமூகத்தை இழிவுபடுத்துவதாக படத்தில் காட்சிகள் உள்ளது என்று எடுத்தால் எல்லா படத்தையும் நான் சொல்லுவேன். எல்லா திரைப்படங்களையும் என்னால் பேசமுடியும். உதாரணத்திற்கு, புதுப்பேட்டை படத்தை சொல்லலாம். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் தனுஷ் மிகக் கொடூரமான ரவுடி. எப்படி என்றால் தன் தந்தையை கொல்லக்கூடிய அளவுக்கு ரவுடி. படத்தில் தனுஷ் ஒரு கொடூரமான ரவுடி. மேலும், படத்தில் தன்னுடைய நண்பருடைய தங்கைக்கு திருமணம் ஆகும்போது எல்லோரும் வாழ்த்து சொல்லுகிறார்கள். ஆனால், தனுஷ் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நண்பர் உடைய தங்கையை வலுக்கட்டாயமாக தாலி கட்டி கூட்டிக் கொண்டு போகிறார். அந்த அளவிற்கு மிக மோசமான ரவுடி. மேலும், படத்தில் ஒரு காட்சியில் எழும்பூர் தொகுதியில் யார் நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்கும் போது தனுஷ் நான் எழும்பூர் தொகுதியில் நிற்கிறேன் என்று சொல்லும் காட்சி வரும்.

Advertisement

எழும்பூர் தொகுதி என்று ஏன் காட்சி வைக்கப்பட்டது? மயிலாப்பூர், வில்லிவாக்கம், திருநெல்வேலி என்று ஏதாவது ஒரு உரை சொல்லி இருக்கலாம் அல்லவா! ஏன் எழும்பூர் என்று வைத்தார்கள் என்றால் எழும்பூர் ஒரு தனி தொகுதி. அதாவது தலித் தொகுதி. அப்போது தனுஷ் தலித்தா?தலித் இனத்தை இழிவு படுத்த அந்த மாதிரி காட்சிகள் வைக்கப்பட்டதா? ஏன் யாருமே கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement