விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர்.
இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.
இதையும் பாருங்க : ‘நானும் வன்னியர் தான், ஆனா எங்க சமோகத்தினரே என்ன ‘-சூர்யாவிற்கு ஆதரவாக பேசியதால் சீரியல் நடிகர் சந்தித்து வரும் பிரச்சனை.
அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.
இருப்பினும் அடுத்தடுத்து படங்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று வருகிறார். இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் வென்றார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா, சமீபத்தில் ஸ்பா ஒன்றின் பாத்டப்பில் பழங்கள் மற்றும் ரோஜா பூக்களை கொட்டி குளியல் போடும் காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.