அட வெக்கம் கெட்டவங்களா.! ஜூலி தான் பொய்னு பார்த்தா அவர் புதிய பாய் பிரண்டும் அப்படியா.!

0
589
Julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

அதற்கு ஏற்றார் போல மற்றவர்களுக்கு ஏற்றார் போல ஜூலியும் கண்டன்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். கடந்த சில மாதமாக ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அதற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான். இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய பேஸ்டி என்று கூறி ரஜித் என்பவரை டேக் செத்துள்ளார். இதுநாள் வரை மார்க்கை பேஸ்டி என்று கூறிவந்த ஜூலி இப்போது வேறு ஒருவரை பேஸ்டி என்று கூறுவதால், என்ன ஜூலி மார்கை கழட்டி விட்டுட்டாயா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த ஜூலி, உண்மையில் அது வேறு யாரும் இல்லை அது மார்க் தான் என்றும், அவர் தான் தற்போது படத்திற்காக வேறு பெயரில் புதிய கெட்டப்பில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர் ஜூலியுடன் இணைந்து எழில் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.