தமிழ் பழமொழி சொன்ன ஜூலி ! காமெடி பீஸ் என கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் ?

0
2715
- Advertisement -

தமிகத்தில் என்ன பிரச்சனை நடந்து வந்தாலும் நடிகர் சிம்புவைப் போல பிக் பாஸ் ஜூலியும் எப்போது பார்த்தாலும் ட்ரென்டில் தான் உள்ளார். ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டுவது, இல்லை வாயை வைத்து விட்டு சும்மா இருக்காமல் ஏதாவது பேட்டியில் கூறி மாட்டிக்கொள்வது என எப்போதும் ட்ரெண்டில் பிசியாக இருக்கிறார் ஜூலி.
அப்படி தான் சமீபத்தில் நடந்த நமீதா திருமனத்தைப் பற்றி கேட்ட போதும் ட்ரெண்டில் வந்து விழுந்து காமெடி பீஸாக மாறியுள்ளார் ஜூலி.

-விளம்பரம்-

சமீபத்தில் பிக் பாஸில் கலந்து கொண்ட நடிகை நமீதாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஜூலியைத் தவிற தன்னுடன் பிக் பாஸில் கலந்துகொண்ட அனைவரையும் அழைத்திருந்தார் நமிதா.

- Advertisement -

அனைவரும் திருமணத்திற்கு சென்றனர். கவிஞர் சினேகன் மட்டும் சில வேலைகள் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை என போனில் வாழ்த்தினார். இது குறித்து ஜூலியிடம் ஏன் நீங்கள் போகவில்லை எனக் கேட்டபோது, அவர் கூறியதாவது,
‘மதியாதோர் தலைவாசல் மிதியாதே’ என அளிக்காத இடத்திற்கு செல்ல மாட்டேன் நான் முதியோர் பழமொழிப்படி வாழ்பவள் எனக் கூறியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டின்சன்கள் ஜூலியை காமெடி பீஸ் என கலாய்க்க துவங்கியுள்ளனர்.

Advertisement