போலீசாரால் துரத்தப்பட்ட ஜூலி ! வீடியோ இணைப்பு உள்ளே ?

0
3371

கடந்த இரண்டு நாட்களாக சென்னை DMS வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 10000 பேர் பணி நிரந்தரம் கேட்டும், சம்பள உயர்வும் கேட்டு போராடி வருகின்றனர் செவிலியர்கள்.இதனை தெரிந்து கொண்ட ஜூலி நானும் நர்ஸ் தான் என அங்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என உள்ளே செல்ல முயற்சித்துள்ளார்.

- Advertisement -

julie

போலீசாரால் துரத்தப்பட்ட ஜூலி !

Posted by இம்சை அரசன் on Wednesday, November 29, 2017

இதனைப் பார்த்த போலீஸ், போராட்டத்திற்கு இப்படி தான் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் போட்டு ஒரு கையில் ஹேண்ட்பேக் தொங்க போட்டு வருவாங்களா? வந்து2 நிமிஷம் உக்காந்து போட்டோ புடிச்சிட்டு போலாம்னு பாத்தியா? என்ன பப்ளிசிட்டி தேடுறியா? எனக் கடுமையாக எச்சரித்து கேட்டில் கூட உள்ளே விடாமல் துரத்தி விட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே எனக்கு நர்ஸாக இருக்க பிடிக்கவில்லை, நான் VJ வாக ஆசைப்படுகிறேன் எனக் கூறியவர். இப்போது எப்படி நானும் நர்ஸ் தான் என அந்த போராட்டக் களத்திற்கு போனார் எனத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சர்ச்சைககளில் சிக்குவது இவருக்கு வாடிக்கையாகிவிட்டது.

-விளம்பரம்-
Advertisement