எனக்கு இந்த ஒரே ஆசை தாங்க – இசைப்புயலையே கவர்ந்த  இன்ஸ்டா வைரல் `ஜூனியர் ரஹ்மான்’ நிகில்

0
396
nikhil
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை போல் பாடி பிரபலமாகி இருக்கும் நிகில் பிரபா குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் இசையமைத்து கொடுத்திருக்கிறார். மேலும், மேற்கத்திய இசையை இசையமைத்து மக்களுக்கு கொண்டு சென்றவர் ரகுமான் தான். அதோடு இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் பாடிய தில் சே ரே என்ற பாடலை அவருடைய குரலிலேயே நிகில் பிரபா பாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக நிகில் பிரபா இருக்கிறார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு சாலுசேரியைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் ஃபிளவர்ஸ் என்ற மலையாள டிவி சேனலில் நடைபெற்ற காமெடி உற்சவம் என்ற நிகழ்ச்சியில் தான் தில் சே ரே பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரல் ஆனது.

- Advertisement -

ரகுமானையே கவர்ந்த பாடகர் :

இதை பார்த்து பலரும் பிரமித்து நிகில் பிரபாவை பாராட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் பாடிய பாடலை தற்போது ஏ ஆர் ரகுமான் தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில் இது குறித்து நிகில் பிரபா பேட்டியும் அளித்திருக்கிறார். அதில் அவர், நான் 13 வருடமாக சினிமாவில் இசையமைத்து வருகிறேன். எனக்கு 19 வயது இருக்கும்போதே மலையாள சினிமாவில் இசையமைக்க தொடங்கி விட்டேன். அதனைத் தொடர்ந்து நான் பல படங்களில் இசையமைத்திருக்கிறேன்.

ஜீனியர் ரகுமான்:

தற்போது நான் சில படங்களில் கமிட் ஆகி இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே ஏ ஆர் ரகுமான் சாருடைய கவர் சாங்ஸ் பாடி இருந்தேன். என்னுடைய குரல் ஏ ஆர் ரகுமான் சாரை போல் இருக்கிறது என்று பலரும் பாராட்டி இருந்தார்கள். அந்த பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சென்னை, ஈரோடு போன்ற இடங்களில் ஜூனியர் ரகுமான் என்று என்னுடைய பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். ஏ.ஆர். ரகுமான் போன்று பாடுவதால் தமிழ்நாட்டில் இருந்தும் தொலைக்காட்சி ஷோவுக்கு எனக்கு நிறைய ஆஃபர் வந்தது.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் குறித்து சொன்னது:

இப்போது தான் ரகுமான் சாரின் கவனத்திற்கு போயிருக்கிறேன். ரகுமான் சார் என்னுடைய பாடலை லைக் செய்து லவ் இமேஜ் போட்டு இருக்கிறார். இதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் சாரை நேரில் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. அதோடு அவருடைய சோவில் அல்லது அவருடனோ சேர்ந்து ஒரு பாடல் பாட வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு. நான் ஸ்கூல் படிக்கும் காலங்களிலேயே நிகழ்ச்சிகளில் பாடிய போது ஏ ஆர் ரகுமான் சாரைப் போன்றே பாடுகிறேன் என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர்களும் சொல்வார்கள்.

ஏ ஆர் ரகுமான் குரல்:

நான் ஏ ஆர் ரகுமான் பாடல் தான் அதிகமாக பாடுவேன். முதலில் நான் ஏ ஆர் ரகுமான் போன்று மிமிக்ரி செய்து பாடுவதாக அனைவரும் நினைத்தார்கள். அதன்பிறகு தான் அது என்னுடைய ஒரிஜினல் குரல் என்று பலரும் புரிந்து கொண்டார்கள். மேலும், ஜூனியர் ரகுமான் என்று என்னுடைய பாடல்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. உலகிலேயே ஏ ஆர் ரகுமான் சாரின் குரல் போன்று பாடுபவர்கள் வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவருடைய குரல் எனக்கு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement