ரஜினி,கமல் படம் முதல் மாயா மச்சிந்திரா சீரியல் வரை நடித்த மிகவும் பிரபலமான நடிகர் திடீர் மரணம்.

0
267
- Advertisement -

திடீரென்று பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் டி.எஸ்.பாலையா. இவருடைய மகன் தான் ஜூனியர் பாலையா. இவருடைய உண்மையான பெயர் ரகு. சினிமாவிற்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்டார். இவர் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். இடையில் இவர் சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கி நடிப்பில் வெளியான சாட்டை படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஜூனியர் பாலையா திரைப்பயணம்:

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் கும்கி, தனி ஒருவன், புலி போன்ற பல படங்களிலும் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாக சில வருடங்களுக்கு முன்பு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜூனியர் பாலையார் நடித்திருந்தார்.

ஜூனியர் பாலையா கடைசியாக நடித்த படம்:

இதை அடுத்து கடைசியாக என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தில் ஜூனியர் பாலையா நடித்திருந்தார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதற்கு பிறகு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இப்படி இவர் 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும், சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜூனியர் பாலையா நடித்த சீரியல்கள்:

அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாயா மச்சிந்திரா போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ஜூனியர் பாலையா இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக இவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது.

ஜூனியர் பாலையா மரணம்:

இப்படி இருக்கும் நிலையில் இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதிகாலையே ஜூனியர் பாலையா இருந்திருக்கிறார். தற்போது இவருக்கு 70 வயது ஆகிறது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் தான் ஜூனியர் பாலையா இறந்திருக்கிறார். இன்று மாலை அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும், ஜூனியர் பாலையா மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement