சொகுசு கார்களின் பேன்ஸி நம்பருக்கு மட்டும் இத்தனை லட்சமா ? மலைக்க வைக்கும் RRR பிரபலத்தின் லைஃப் ஸ்டைல்

0
475
juniorntr
- Advertisement -

பேன்சி நம்பருக்காக லட்ச கணக்கில் செலவு செய்யும் RRR பட நடிகர் ஜூனியர் என்டிஆர் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. RRR என்பது இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகிய இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. உலக அளவில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலில் வாரி குவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை RRR திரைப்படம் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் வசூலில் 1200 கோடி ரூபாய் வசூலித்த 3-வது இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் RRR பெற்றுள்ளது.

- Advertisement -

RRR படத்தின் சாதனை:

இதற்கு முன்பே அமீர்கானின் தங்ல், ராஜமவுலியின் பாகுபலி 2 ஆகிய படங்கள் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் வெளியீட்டுக்கு பின் பேன் இந்திய ஸ்டார்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உருவாகி இருக்கிறார்கள். இது தொடர்பான தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர்-ஐ பற்றி தெரியாத சில விஷயங்களைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

NTR

ஜூனியர் என்டிஆர் திரைப்பயணம்:

தெலுங்கு சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜூனியர் என்டிஆர் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞர், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் முன்னாள் ஆந்திர மாநிலம் முதல்வர் என். டி. ராமாராவ் உடைய பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று வருகின்றனர்.

-விளம்பரம்-

ஜூனியர் என்டிஆரின் சொகுசு கார்கள்:

அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் கடைசியாக நடித்த படம் RRR. இந்த படத்திற்காக 45 கோடி ரூபாய் ஊதியம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர் குடும்பத்துடன் ஜூப்லி ஹில்ஸில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீடு 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதோடு இவருடைய வீட்டில் பல சொகுசு வசதிகள் உள்ளன. அதே போல் இவர் கார்கள் மீதும் அதிக பிரியம் கொண்டவர். இதனால் இவருடைய வீட்டில் வரிசையாக பல கார்களை வாங்கி குவித்துள்ளார்.

பேன்சி நம்பருக்காக லட்ச கணக்கில் செலவு:

இவரிடம் BMW 720LD, Mercedes-Benz GLS 350d, LR Range Rover Vogue and Porsche 718 Cayman போன்ற பல வகையான சொகுசு கார்கள் இருக்கிறது. ஆனால், அதன் பதிவு எண்கள் எல்லாமே 9999 தான். ஏன்னா, இவருடைய ராசி எண் 9999 என்று கூறப்படுகிறது. அதனால் தான் இவர் வீட்டில் உள்ள அனைத்து கார்களிலும் 9999 நம்பர் உள்ளது. அதிலும் குறிப்பாக, அவருடைய பிஎம்டபள்யூ காருக்கு தன்னுடைய ராசியான எண்ணான 9999 -ஐ வாங்க கிட்டதட்ட 11 லட்சம் ரூபாய் செலவழித்து வாங்கியிருக்கிறார். அதேபோல் சமீபத்தில் 3.16 கோடி மதிப்பிலான Lamborghini கார் ஒன்று வாங்கியிருந்தார். மேலும், அந்த காரின் ஃபேன்சி நம்பருக்காக 17 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement