விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் பாடப்போகும் பிரபல நடிகர்.வேற லெவல் மாஸ்

By Rajkumar · 23/2/2020

பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி, கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதே போல இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், ,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=gjnrtCKZqYg

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். அதனால் தான் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஒரு குட்டி கத என்ற தலைப்பில் வெளியான இந்த பாடலை விஜய் பாடி இருந்தார்.

இதையும் பாருங்க : மாஃபியா படம் நல்லா இல்ல . ரசிகரின் விமர்சனத்திற்கு பிரசன்னாவின் பதில்.

பொதுவாக நம்ம விஜய் அவர்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் குட்டி கதைகளை சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அதே வரிகளில் பாடல் அமைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும், இந்த குட்டி கதை பாடல் தான் `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் இந்த பாடலை தெலுங்கில் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் குரலில் குட்டிக்கதை பாடல் விரைவில் பதிவு செய்யப்பட்டு வெளியிட உள்ளது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய்க்கு ஏற்கனவே தெலுங்கில் பல லட்ச ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஜூனியர் என் டி ஆர் குரலில் வேறு குட்டி கதை உருவாக போவதால் தமிழை போல தெலுங்கிலும் இந்த பாடல் ஹிட் அடிக்க போகிறது என்பது மட்டும் சந்தேகம் இல்லை.

behindtalkies AMP · Quick view
View full