மாஃபியா படம் நல்லா இல்ல . ரசிகரின் விமர்சனத்திற்கு பிரசன்னாவின் பதில்.

0
2180
prasanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின் இவர் இரண்டாவதாக இயக்கிய நரகாசுரன் படம் பைனான்சியல் பிரச்சனையால் வெளிவராமல் உள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகி வெளிவந்த படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் கதாநாயகனாக வெளியாகி அருண் விஜய் நடித்து உள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார். மாஃபியா படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர். இவர் மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த ஸ்பை ஸ்டார் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இவர் சமீபகாலமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரசன்னா அவர்கள்மாஃபியா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகர் பிரசன்னாவும் ஒருவர். எப்போதும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாகவும், ரசிகர்களின் கருத்துக்களுக்கு பதில் அளித்தும் வருவார் பிரசன்னா.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் என்ன சமைச்சாலும் அவர் குறை சொல்லிட்டு இருப்பார். குக்கூ வித் கோமாளி உமா ரியாஸ்.

பொதுவாகவே நடிகர்கள் ரசிகர்கள் கேட்க்கும் நேர்மறையான கருத்துக்களுக்கு மட்டும் பதில் அளிப்பார்கள். ஆனால், நடிகர் பிரசன்னாஅவர்கள் ரசிகர்களின் எதிர் மறையான கருத்துக்கும் பதிலளித்துள்ளார். பிரசன்னாவின் இந்த செயல் மூலம் ட்விட்டரில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. தற்போது ட்விட்டரில் பயனர் ஒருவர் மாபியா படம் நல்லா இல்லை என்று எதிர்மறையாக கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கு பிரசன்னா அவர்கள் கூலாக கூறியது, எல்லா படத்திற்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். உங்கள் கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன் என்று கூறி உள்ளார். இப்படி பிரசன்னா பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிரசன்னாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதே போல் சமீபத்தில் கூட பிரசன்னா தொகுத்து வழங்கி இருந்த நிகழ்ச்சி குறித்து பயனர் ஒருவர் கூறியது, பிரசன்னா தொகுத்து வழங்குவது போரடிக்கிறது, அவர் சுமாரான நடிகர். இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர் என்று கூறியுள்ளார். அதற்கு பிரசன்னா அவர்கள் கூறியது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை. நான் சுமாரான நடிகர் என்றால், அதை மேம்படுத்திக்கொள்கிறேன். இன்னும் வெற்றிகளை பெறவில்லை என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன்” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement