காலா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாயின் மதிப்பு இத்தனை கோடியா !

0
1064
Kaala

ரஜினியின் காலா படத்திற்கான ஹைப் எகிற்கொண்டே போகிறது. ஒரு புறம் அவரது படத்தின் டீசரை வைத்து ‘கியா ரே’ மீம்சகள் ஆயிரக்கணக்கில் படையெடுத்தாலும், திரைக்கலைஞனாக அவரது மாஸ் ஸ்டைல் அப்படியே தொடர்ந்து வருகிறது என்பது தான் உண்மை.

KAALA

பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் ரஜினியுடன் ஒரு நாட்டு நாய் அமர்ந்திருக்கும். அந்த நாயின் தற்போதைய மதிப்பு என்ன தெரியுமா?

இந்த நாட்டு நாயை, சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து தத்து எடுத்து வளர்த்து வருகிறார் அதன் ஓனர். எடுத்து வந்து அதற்கென படத்தில் நடிக்க பயிற்சி கொடுத்துள்ளார்.

kaala-poster

பின்னர்தான் பா.ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார் இந்த நாட்டு நாய். தற்போது இந்த நாய்க்கு கிராக்கி அதிகம் ஆகிவிட்டது. ரஜினயுடன் பா.ரஞ்சித் படத்தில் அதுவும் இரு நாட்டு நாய் நடித்ததால், தமிழ் தேசிய வெளி நாட்டு தமிழ் மக்கள் இந்த நாயை சுமார் 2 கோடி வரை விலை கொடுத்து வாங்க தயாராக உள்ளனராம்.

ஆனால் இதனை வளர்த்த உரிமையாளர், தன் பிள்ளை போல் பார்த்து வளர்த்ததால் அதனை கொடுக்க மறுத்துள்ளார். என்ன இருந்தாலும் நாட்டு வகை நாய் என்றால் எப்போதும் அவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.