சினிமா ஹீரோயின் ஆகும் கனவு – இன்ஸ்டாவில் விஜய் டிவி சீரியல் நடிகை தெறிக்கவிடும் புகைப்படங்கள். யார் தெரியுதா?

0
174
- Advertisement -

டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்த வெண்ணிலாவின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்தவர் நடிகை பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சின்னதிரையில் பிரியங்கா :-

பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார். இதை தொடர்ந்து, கன்னட சின்னத்திரையில் நடிப்பதற்கு பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி தொடரில் துளசி கேரக்டரில் நடித்தார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

காற்றுக்கென்ன வேலி முலம் ரீ-என்ட்ரி :-

பிறகு கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான ராதா ரமணா தொடரில் பிங்க்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தவர் சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். அந்த தொடரில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார். பிரியங்காவின் நடிப்புக்கு தமிழில் அவ்வளவு ரசிகர்கள். நல்ல டிஆர்பியில் சென்றுகொண்டிருந்த சீரியல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

பிறகு சொந்த ஊர் திரும்பிய அவர் விஜய் டிவி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுடன் இணைந்து நடித்துஇருந்தார். வெண்ணிலா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக பிரியங்காவும், ஆசிரியராக சூர்யாவும்நடித்து இருந்தனர். இந்த சீரியலில் கல்லூரி சீன்கள் அதிகம் இடம்பெற்று இருந்ததால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சீரியலில் பல மாறங்கள் தடைகளை தான்டி ஓளிபரப்பாகிறது :-

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். 20 வயதாகும் பிரியங்காவுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்கள் வாயடைத்து போய்விடுவார்கள். அந்த அளவுக்கு செம்ம மாடர்னான, கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுகிறார்.

வைரலாகும் இன்ஸ்ட்டா கிளிக்ஸ் :

அந்த வகையில் இரண்டு நாளைக்கு முன்பு வெண்ணிலா வெளியிட்ட பிளாக் ட்ரெஸ் கிளாமர் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரல். அந்த அளவுக்கு செம்ம மாடர்னான, கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுகிறார். பலருக்கும் இந்த புகைப்படத்தில் இருப்பவர் காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவா என சந்தேகப்படும் அளவுக்கு வித்தியாசமான லுக்கில் இளைஞர்களின் மனதை பறிக்கும் பிரியங்கா.

Advertisement