விஜய் அவார்ட்ஸ்ஸில் புறக்கணிப்பட்டாலும், காற்றுக்கென்ன வேலி செய்துள்ள சாதனை (இதுக்கு போய் விருது கொடுக்காமவிட்டிருக்காங்களே)

0
706
Kaatrukennaveli
- Advertisement -

பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களும் சரி, விருது விழாக்களும் சரி சர்ச்சையில் சிக்காமல் இருந்தது கிடையாது. சூப்பர் சிங்கர், ஜோடி, பிக் பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் தகுதியான நபர்களுக்கு வெற்றி சென்று அடைந்தது இல்லை என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சியில் தகுதியான சீரியல்களுக்கும் தகுதியான நடிகர்களுக்கும் விருதுகள் கிடைக்கப்பெறவில்லை என்ற புதிய சர்ச்சை தற்போது எழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு கவர கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.

- Advertisement -

விஜய் டெலிவிஷன் விருதுகள் 2022 :

அதே விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோரும் இந்த விருது வழங்கும் விழாவை விஜய் டிவி நடத்தி வருகிறது.

புதிய சீரியல்களுக்கு கிடைத்த விருது :

அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஆனால், இந்த விழாவில் ரசிகர்களின் அபிபாமான பல சீரியல்களுக்கும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை என்பதே தொலைக்காட்சி ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

புறக்கணிக்கப்பட்ட சீரியல் :

இந்த வருடம் பெஸ்ட் சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடர் தட்டிச் செல்கிறது. fav on-screen fair என்ற விருதை தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஜோடி நட்சத்திரா மற்றும் வெங்கட் பெறுகின்றனர். மேலும், பெஸ்ட் குடும்பம் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைக்கிறது. ஆனால், விஜய் டிவியில் பல ரசிகர்களை கவர்ந்த காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

This image has an empty alt attribute; its file name is image-33.png

Trpயில் முதல் இடம் :

இதுகுறித்து அந்த சீரியலில் நடித்து வரும் ஷியாமலா கூட தனது சமூக வளைதள பக்கத்தில் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். அதுவும் விருது விழாவில் தங்களின் சீரியல் போஸ்டர்கள் கூட இல்லை என்றும் தாங்கள் கடைசியில் அமர்த்தப்பட்டதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது காற்றுக்கென்ன வேலி டிஆர்பியில் சாதனை செய்திருக்கிறது. மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி மதிய நேர சீரியல்கள் டிஆர்பியில் முதலிடம் பிடித்து இருக்கிறது.அதே போல ஒரு மணி ஸ்லாட்டில் தற்போது காற்றுக்கென்ன வேலி தொடர் தான் முதலிடம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Advertisement